ஹஜ்ரத் S.R.S.ஷம்சுல்ஹுதா
சம்சுல்ஹுதா ஹழ்ரத் அவர்களின் சொற்பொழிவு யார் மனதையும் புண்படுதுவதில்லை. குறித்த நேரத்தில் தனது உரையை முடித்துக் கொள்வதில் மிகவும் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் தலைப்புக்கு தகுந்ததுபோல் பேசுவது அவர்களது இயல்பு . முன்னுரை ,தெளிவுரை , கருத்துரை ,எப்படி இருக்க வேண்டும் என்பதில் முக்கியம் கொடுத்து பேசுவதற்கு தன்னை தயார் செய்துக் கொள்ள அதிகமாகவே படிப்பார்கள். அவர்களது ஜும்மா பிரசங்கத்தில் குரான் வசனங்களும் அதன் விளக்கங்களும் அதற்கு தகுந்ததுபோல் ஹதீஸ்களும் ( நபிமொழியும்) நிறைந்து நிற்கும்.முடிவுரையில் தனது கருத்தினை அதற்கு ஏற்றதுபோல் இஸ்லாமிய நெறியோடு ஒரு விளக்கத்தினை தந்து முடிப்பார்கள். அவர்களது சொற்பொழிவினை கேட்ட பின்பு இறைபக்தி நம் மனதில் வந்து ஒட்டிக்கொள்ள அந்த இறைவனது அருள்நாடி அவனை தொழ ஆரம்பிப்போம்.அந்த தொழுகையில் மனமொன்றி தொழுது நிற்போம். மன அமைதி கிடைக்க உள்ளம் உவகையடைய அதனால் ஆத்ம திருப்தி ஏற்படும்.
மர்ஹூம் ஹஜ்ரத் S.R..S.ஷம்சுல்ஹுதா அவர்கள் நீடூர் - நெய்வாசலில் பல ஆண்டுகள் நீடூர் - நெய்வாசல் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் நாஜிராகவும்(முதல்வராக) நீடூர் நெய்வாசல் ஜாமியா மஸ்ஜிதில் தலைமை இமாமாகவும் இருந்து சிறந்த சேவை செய்தார்கள். ஹஜ்ரத் அவர்களின் சொந்த ஊர் வடக்கு மாங்குடி









