Sunday, 24 September 2017

மற்றவர்க்கு போதிக்க வந்த அமானுதமே(அடமானமே) உம் கல்வி

கடுமை சொல் சொன்னாலும்
கருணை சொல் சொல்வார்
முகமதைக் கண்டோர் முகம் மலர்வர்
அகமது குளிர மனம் மகிழ்வர்
துன்பப் பட வைத்தோர்க்கும்
நன்மை பட செய்வார் நபி
காய்வழி வந்து கனியாகி சிறப்படைய
சேய்வழி நகர்ந்து பணிவாகி பெரியோர் போற்ற
அறவழி அறிந்து பிறவழி நாடுவார்

உங்களை அறிய தொடருங்கள் உன் ஆய்வை!

உங்களை அறிய தொடருங்கள் உன் ஆய்வை!
விழிகளை திறந்து வானத்தை உற்று நோக்குங்கள
விடியலில் கிளம்பும் வெளிச்சம்
பகலில் சுடர்விடும் வெளிச்சம்
மாலையில் மறையும் வெளிச்சம்
தினம் தொடர்ந்து வரும் சூரிய ஓட்டம்
இரவு காலங்களில் மாறி வரும் நிலா
இரவு நேரத்தில் நட்சத்திரக் கூட்டம்
இது தொடர்ந்து வரும் நிகழ்வு
இதன் ஓட்டத்தை மாற்றத்தை உருவாக்கியது யார்!
அவைகள் சுற்றி வரும் பாதையை அவைகளை அவைகளை அறிய வைத்தது யார்!

Saturday, 9 September 2017

இறைவனின் அருட்கொடைக்கு நிகர் இறைவனே.....80 வயதுடைய ஒரு மனிதரின் இதயத்தில் ஆப்ரேஷன் நடந்தது.
நல்லபடியாக நடந்து முடிந்த பின்...
+ அவரிடம் ரூபாய் 8 லட்சத்திற்க்கான பில்லை மருத்துவமனை அதிகாரிகள் அவரிடத்தில் கொடுத்தனர்......
+ அந்த பில்லை பார்த்ததும் அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை....
+ அப்பெரியவரின் பரிதாபகரமான அழுகையைப் பார்த்த.....
மருத்துவர் கூறுகிறார்....

Saturday, 12 August 2017

காதல்,அன்பு ,நேர்மை

காதலையும் அன்பையும், நேர்மையையும் தனது இதயத்தில் மதிக்கின்ற எவரும் தன்னுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, நேசிப்பவரை அன்பிலும் பாசத்திலும் மனதில் கொண்டிருப்பதாக தெளிவாகக் கூறுவதொடு செயலிலும் காட்ட வேண்டும்
யாரை நேசிக்கிறீர்களோ அந்த நபரிடம் உங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டும்.

Friday, 30 June 2017

யார் அந்த தமிழ் நெஞ்சம்


அறியப்பட வேண்டிய நண்பர் தமிழ்நெஞ்சம் .

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில்  தமிழ்நெஞ்சம்.
தமிழ்நெஞ்சம்.அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் தமிழ்நெஞ்சம். அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

Sunday, 18 June 2017

பெண்ணிற்கு தோல்வியை தாங்க முடியாது.


கிளியோபாட்ரா எகிப்து நாட்டின் ஆட்சியாளராக இருந்தது கிளியோபாட்ராவின் அழகு மட்டும் காரணமல்ல .
கிளியோபாட்ரா ஒன்பது மொழிகளில் சரளமாக பேசக் கூடியவளாகவும் கணித, தொழில் வல்லமை பெற்றவளாகவும், சிறந்த அரசியல்வாதியாகவும் இருந்ததாக சரித்திரம் சொல்கிறது.
கிளியோபாட்ரா பண்டைய எகிப்தில் மிகவும் பிரபலமான ராணியாக இருந்தாள். அவள் அலெக்ஸாண்ட்ரியாவில் 69 கிமு பிறந்தார். அவரது சகோதரிகள் இறந்த பிறகு, அவர் அரியணை அடைந்தாள். மற்றும் தனது ஆட்சியின் போது, தனது ஆட்சி வேகமாக விரிவடைந்த ரோமானிய பேரரசாக எகிப்து இருக்க வேண்டுமென வெகுவாக விரும்பினாள் .

உதட்டில் வரி வந்து வாயை அடைக்கிறது . .

மனைவியின் சேவைகளுக்கு மட்டும் வரி இல்லை!
1 பெட்ரோல் விலை ஏற்றம் . ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.
2 கேஸ் விலை அதிகம் ஆனாலும் தேவைக்கு அது கிடைப்பதில்லை
3 பஸ் டிக்கெட் விலை அதிகமாகிக் கொண்டே இருந்தாலும் அது நேரத்திற்கு வந்து சேர்வதில்லை!
வந்து சேர்ந்தாலும் இடம் கிடைபதில்லை
4 ஒரு கிரிகெட்டிற்கு கோடிக்கணக்கான பணத்தைக் செலவழிப்பார்கள் ஆனால் பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் விளையாட இடமில்லை.
5 உண்ணும் காய்கறிகளும் , பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.ஆனால் நடைபாதை நடக்கக் கூடிய பாதைகளாக இல்லை
6 நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.