Sunday 30 August 2015

அதுவும், முடிந்து விடும்

அம்மா,
நான் உன்னை இழந்து வாழ்கின்றேன்
நான் உன்னை இழந்ததால்
நான் மிகவும் கஷ்டப்பட்டேன்

நான் இன்று உனக்குப் பிடித்த நாற்காலியில் தனியாக அமர்ந்து
என் வாழ்க்கையைப்பற்றி நினைத்து அதிசயிக்கின்றேன்
அது என்னை உங்கள் ஞாபகத்தில் அழைத்துச்செல்கின்றது

உங்கள் மகளாகிய நான் வளர்ந்து விட்டேன்
உங்கள் மகள் உலகத்தை சந்தித்து விட்டாள்
உங்கள் மகள் சோதனைகளைக் கடந்து சவால்களை சமாளித்து விட்டாள்
இவைகள் அனைத்தும் என்னால் செயல்படுத்த முடிந்தது
இறைவனிடம் எனக்காக நீ செய்த பிரார்த்தனையால்தான்

பெற்றோர்

உங்கள் கண்கள் உங்கள் எண்ணங்களைப் பேசுகின்றன ,
உங்கள் குரல் உங்கள் வலி மற்றும் துன்பம் அனைத்தையும் மறைத்து விட்டு ஒலித்து இசைக்கின்றது

உங்கள் மென்மையான கருணையான இதயம்
எங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அர்த்தத்தை கொடுத்து,
எங்கள் பாசத்தை உயர்வடையச் செய்கின்றது
ஒவ்வொரு கணமும் ஒரு புதிய ஆரம்பமாய் அலை வீசுகின்றது

உங்கள் வார்த்தைகள் மற்றும் நிலையான பாதுகாப்பு கொண்ட
உங்கள் மென்மையான மற்றும் உங்கள் பாசமான அணுகுமுறை
அது எப்போதும் எங்கள் மனதில் ஊஞ்சலாய்
அமைதியாக தென்றலாய் நெருடுகின்றது

நீங்கள் எங்களுக்கு அல்லாஹ்வின் அருளால் உயரிய உயிரைக் கொடுத்து நேசித்தீர்கள்
நீங்கள் இப்போதும் மற்றும் எப்போதும் அல்லாஹ்வின் அருளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

Monday 24 August 2015

ஹிஜாப் அணிந்து செல்வது எந்த தவறுமில்லை. ஹிஜாப் நன்மையான பயனையே தரும்



நான் ஒடுக்கப்பட்ட பெண்ணாக நீங்கள் என்னை நினைப்பதனை நான் அறிகின்றேன் அதற்கு முக்கியமாக காரமாக நீங்கள் சொல்வது நான் உடுத்தும் ஆடை . ஹிஜாப் அணிந்து செல்வது எந்த தவறுமில்லை மற்றும் இது நன்மையான பயனையே தரும்
ஆடை பாதி ஆள் பாதி என்பார்கள் , அதன் உண்மையான பொருள் சுத்தமான ஆடையணிந்து அசிங்கான ஆடை அணியாமல் இனக்கவர்ச்சியை தூண்டாமல் இருப்பதேயாகும் . பெண்களுக்கே உள்ள தனித்த குணம் வெட்கம். .வெட்கம் கெட்டால் வேதனை வந்து சேரும் . என்னுள்ளே இருக்கும் சிறப்பு நாணமும்,அடக்கமும்,தான். மனதளவில் உள்ள உயர்ந்த எண்ணங்கள் தான் பெண்மைக்கு பெருமை தருகின்றது . நான் ஒரு முஸ்லிம் நான் விருபிய ஆடையை விரும்பி அணிந்தாலும் அதற்கு ஒரு வரைமுறை உண்டு .அதனை மிகவம் பெருமையாகவே கருதுகின்றேன் .என் உடல் அழகை என் கணவர் கண்டு களிப்பதில் எந்த தவறுமில்லை. நான் கவர்ச்சி தரும் ஆடைகளை அணிந்து மற்றவர்களின் மனதினை கெடுத்து அதனால் விளையக்கூடிய தவறான செயல்களுக்கும் பாவமான் காரியங்களுக்கும் நான் ஒரு காரணமாக இருந்து விடக்கூடாது. இவ்விதம் நான் உடுத்தும் உடையால் என் உரிமை சிறிதும் பாதிக்கப்படவில்ல. மற்ற பெண்களைப் போலவே கல்வி கற்க பாடசாலைக்கு, கல்லூரிக்கு செல்வதற்கும் மற்றும் அலுவலகங்கள் செல்வதற்கும் இஸ்லாத்தில் எந்த தடையுமில்லை
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது. சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்தியது.

Saturday 22 August 2015

நாம் ஏன் மகிழ்வாக இல்லை?

என் முடி இப்போது வெள்ளையாகி விட்டது , இளமையில் இருந்த மகிழ்ச்சி இப்பொழுது எங்கே காணாமல் போய்விட்டது.வயது வளர முடியின் நிறம் மாறுவது இயற்கை. மனதில் மாறுபடும் மகிழ்வும் குறைந்து வருவது இயற்கையாகிவிடுமோ! வயதானால் உள்ளம் பண்பட்டு துயரம் தொலைவதற்கு என்னதான் வழி!

அதற்கும் ஒரு வழியை இறைவன் காட்டாமலா இருப்பான்!

ஆசை,அளவிற்கு மீறிய விருப்பம், நினைத்தது கிடைக்காமல் போகும்போது ஏற்படும் விரக்தி ,கிடைத்ததை இழக்கும் போது அனுபவிக்கும் துயரம் அத்தனையும் வாழ்வோடு ஒன்றியதுதான். அனைத்தையும் சமநிலையாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் எப்போழுதுதான் வரும்?

Thursday 20 August 2015

நித்தம் நித்தம் நினைவில் வந்து நினைவூட்ட!

பத்தினி வேண்ட மாதம் மும்மாரி பெய்யும்
மணமாகி வரவேண்டியது வராமல் 'மாதம்' மும்மாதமாக
கணவன் காதில் போட்டு வைக்க
'கள்ளி இத்தனைநாள் மறைத்து வைத்தாயே !'
இனிய முத்தங்கள் அடை மழையாய் பெய்ய
நான் என்னை மறந்தேன்
நேரம் பார்த்து நேசம் காட்டி நெருங்கினார்
வாரிசு வேண்டி பொறுமைத் தேவை
அறிவுரை ஆற்றும் ஆற்றல் பெற்றேன்
அதிசயம் ஆனால் உண்மை அடங்காதவர் அடங்கினார்

Saturday 15 August 2015

பிரபஞ்சத்தின் விரிவு / பிரபஞ்சத்தின் அற்புத அளவு


பிரபஞ்சத்தின் விரிவு

பிரபஞ்சத்தின் அற்புத அளவு

பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் எண்ணிக்கை அநேகமாக உலகின் அனைத்து கடற்கரை மணல் துகள்கள் எண்ணிக்கை போன்று உள்ளது .

பிரபஞ்சத்தின் மொத்த பொருள்கள்  கணக்கிலடங்காதவை.

விண்மீன் குழுவில் கோடிக் கணக்கில் நட்சத்திரங்கள்