Thursday 28 November 2013

முழுமை எதில் உள்ளது !


 முழுமை எதில் உள்ளது ! முடிவின் இருதியே  முழுமையின்  துவக்கம்.  குறை  இல்லாத மனிதனைப் பார்க்க முடியுமா ! .குறையிலும்   நிறையினைக் காண்பவனே சிறந்தவன் . முழுமையாக கிடைக்கவில்லையயே என ஆதங்கப்படுவதைவிட கிடைத்ததைக் கொண்டு  நிறைவு அடைந்தவன் வாழ்வே மகிழ்வாக அமையக் கூடும் . தாகம்  தீர்க்க நீர் நாடி வேண்டுவோர்  கிடைத்த நீரைக் கொண்டு தாகத்தினை தீர வழி உண்டாக்கிக் கொள்வார்கள் . அதன் வேகம் படிப் படியாக குறைவதனை உணர்வார்கள் . எது தேவைக்கு  அதிகம் கிடைத்தாலும் அதன் மதிப்பு குறைவதனைக் காணலாம் . கடைத்தெருவில் பொருட்கள் அதிகம் வந்து சேர்ந்தாலும்  ஒரு பொருளின் விளைச்சல் அதிகமாகிவிட்டாலும் அதன் மதிப்பு குறைவாக போய்விடும் நிலை என்பது உண்மை . வாழ்வின் தத்துவமும் இதில் அடங்கும் .

Monday 25 November 2013

நம் மனதில் தெளிவாக எதுவும் பார்க்க முடியும்,

நம் மனதில் தெளிவாக எதுவும் பார்க்க முடியும்,
ஒரு உணர்ச்சியில்லாமல் எதுவும் நம்மை பாதிப்பதில்லை!

ஒரு எழுதி வைத்த பட்டியலை பாருங்கள்
எழுதி வைத்த பட்டியல் காற்றில் பறந்து விட்டது.
எழுதி வைத்த பட்டியல் முழுமையாக நினைவுக்கு வராது

விளையாட்டாக ஒரு பாடலை எழுத முயற்சியுங்கள்!
விளையாட்டாக எழுதிய பாடலுக்கு ஒரு இசையை கொடுங்கள்
விளையாட்டாக இசையுடன் எழுதிய பாடலை பாடுங்கள்
விளையாட்டு வினையாகி மனதில் பதிந்து விட்டதை நினைத்து மகிழுங்கள்

Saturday 23 November 2013

இனாமுக்கும் மதிப்பு இல்லாத நிலை!


 எனது நண்பர் ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய கதைகளும், கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும், வழிகாட்டி குறிப்புகளும் பல பத்திரிக்கையில் வந்தது. அதனால் அவருக்கு சிறிது வருமானமும் கிடைத்தது.

அவருக்கு நீண்ட கால ஆசையாக அதனை சேமித்து ஒரு புத்தகமாக வெளியிட விரும்பினார் .

 அந்த விருப்பத்தை நிறைவேற்ற தனது எழுத்துக்களால் கிடைத்த வருமானத்தை வைத்து மிகவும் செலவு செய்து குறைந்த ஆதாயம் வரும் நோக்கத்துடன் ஒரு புத்தமாக வெளியிட்டார். அவர் எதிர்பார்த்தபடி அந்த புத்தகங்களை யாரும் வாங்கவில்லை. அதனால் அச்சிட்ட அந்த அருமையான, அழகிய புத்தகங்கள் தேங்கிக் கிடந்தன. அதனால் அவர் மனம் மிகவும் வேதனை அடைந்தது. இதனை என்னிடம் சொல்லி வருத்தப் பட்டார்.
நான் அவருக்கு சொன்னேன் 'புத்தகங்கள் கரையான் பிடித்து அழிந்து போவதைக் காட்டிலும் அந்த புத்தகங்களை இனாமாக கொடுத்து விடு. மக்கள் படித்து பயன் பெறட்டும். அதனால் உனக்கு நன்மை வந்து சேரும்' என்று

Monday 18 November 2013

முன்னால் போ, பின்னால் வருகிறேன்.


மேகங்கள் மோதின
இடி இடித்தது
ஒலியை உண்டாக்கியது

இடி இடித்ததால்
மின்னல் ஒளியை தந்தது

இடியின் ஒலி தாமதிக்க
மின்னல் ஒளி முந்திக் கொண்டது

இடிபோன்று ஒலித்த கடஞ் சொற்கள் வேகமாய் தாக்க
இமைகள் துடிக்க விழிகளின் ஒளியை மறைக்க தாமதித்து கண்ணீர் வழிந்தன

Sunday 17 November 2013

அறியாமையின் நிலை மோசமான நிலை

அறியாமையின் நிலை மோசமான நிலை
இறைவனை அறியும் நிலை உயர்வான நிலை
இறைவனின் ஒளி ஆன்மாவின் அறிதல் நிலை
ஆன்மாவின் ஒளி வழி ஞானத்தை பெறுதல் நிலை

இறைவனின் அருள் இருளைப் போக்கி ஒளியை தருகிறது
இறைவனை அறிதல் ஆன்மீக ஞானம் பெற வைக்கிறது
ஆன்மீக ஞானம் அறியாமையும் மூடநம்பிக்கையும் .போக்குகின்றது
பயத்தை அகற்றி நேர்வழியில் நடை போட வைக்கின்றது

பெண் என்றால் பேயும் நடுங்கும்

பெண் என்றால் பேயும் நடுங்கும்
பெண் என்றால் பேயும் இரங்கும்
பெண் என்றால் பேயும் மயங்கும்
பேய் என்றால் பெண்ணும் பயப்படுவாள்
பேய் என்றால் வக்கிரம் கொண்ட(காம வெறியன்கள்)ஆணாவான்

பேய் என்பது பொய்யானாலும்
பேய் என்பது அச்சம் தரக் கூடியதற்கு உருவகப் படுத்தப் படும்

வக்கிர புத்தி இருபாலர்களுக்கும் உண்டு
அதனால்தான் ஆண் பேய், பெண் பேய் என்கிறார்களோ!

உன் மவுனம் சம்மதமானால்!



உன் மவுனம் சம்மதமானால்
என் கவனம் உன் பக்கம்

உன் மவுனம் உன் விழிகளில் வெறுப்பைக் காட்டினால்
என் கவனம் திசை மாறும்

சொல்லால் சொல்வதை விடுத்து
வார்த்தையால் விளையாடுவதை தவிர்த்து
விழிகளின் பார்வை விளக்கம் கொடுப்பது சிறந்து விடுகின்றது
விழிகள் அத்தனை உணர்வுகளையும் வெளிக் கொண்டு வருகின்றது 

Tuesday 12 November 2013

சூரிய ஒளியும் நிலா ஒளியும் திடீரென்று குறைவதில்லை

ஓரிடத்தில் அமர்ந்து உலகமெல்லாம் அலைகிறேன்
ஓரிடத்திலும் நிலை கொள்ள முடியவில்லை

அதைப் பார்க்க அங்கே ஓட
இதைப் பார்க்க இங்கே வர

வேண்டியது எங்கும் நிரம்பி கிடைகின்றது
வேண்டியதை இங்கு நிரப்பி வர மனம் நாடுகிறது

ஆசைப்பட்டதை அடைய முயற்சிப்பதற்குள்
அரசாட்சி செய்வோர் அடைய விடுவதில்லை

தேடியதில் கிடைத்த முத்துக்கள் சேர்பதற்குள்
தேடியது கிடைத்த முத்துக்கள் இருள் கவ்வியதால் கை நழுவி போயின

சூரிய ஒளியும் நிலா  ஒளியும் திடீரென்று குறைவதில்லை
மின்சாரம் மட்டும் திடீர் திடீரென்று நின்று போகின்றது

Saturday 9 November 2013

திருமண விருந்தில் தரப்படும் சிறந்த உணவு பிரியாணியே

சிலர் திருமண விருந்துக்குச் சென்றால் பிரியாணி சாப்பிடுவதில்லை
வெஜிடேரியன் சாப்பிட செல்கிறார்கள் .

அவர்கள் சொல்லும் காரணம் அவர்களுக்கு பிரசர் மற்றும் கொலாஸ்ரால் இருப்பதாக சொல்கிறார்கள் .


பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலாக்கள் உடலுக்கு நன்மை தரும்
அவர்கள் சாப்பிடுவதற்கு உகந்தது பிரியாணிதான் .பிரசர் மற்றும் கொலாஸ்ரால் உள்ளவர்கள் மட்டும் அதில் உள்ள ஆட்டுக் கறியை நீக்கி விட்டு சாப்பிட வேண்டும் .


வெஜிடேரியன் உணவில் தரப்படும் நெய் ,பருப்பு அவர்களுக்கு உகந்ததல்ல .மற்றும் அந்த உணவில் சோடா உப்பு கலந்திருக்க வாய்ப்பு உண்டு .
வெஜிடேரியன் உணவு ஹோட்டலில் ஆர்டர் கொடுத்து வரவைக்கப் பட்டது . அதில் சேர்க்கப்படும் காய் கறிகளும் உயர்ந்தவையாக இருக்காது .

Thursday 7 November 2013

ஒரு காரணமுமின்றி ஒன்றையும் இறைவன் படைக்கவில்லை.

ஒன்றிலிருந்து ஒன்று உருவாகிறது .
ஒன்றிலிருந்து ஒன்று உருவாகுவது உயர்வானதாகவும் இருக்கலாம்  .


சுழிக்கு (பூஜ்யம் 0) மதிப்பு இருப்பதனால்தான் சுழியை கண்டு பிடித்தார்கள். ஒன்றோடு சுழி சேர சுழிக்கும் மதிப்புதான்.
எதனையும் ஒதுக்க வேண்டாம். ஆய்வு ,சேர்ப்பு ,மெருகு தர மதிப்பு தானே உயரும்
பூஜ்யத்தை கண்டுபிடித்தது இந்தியர்கள்

அல்ஜிப்ரா என்ற கணித வழக்கு அராபியர்களால் உருவாக்கப் பட்டதாக சொல்வதுண்டு .

அரேபிய புகழ்பெற்ற கணித மேதை அல்-குவரிழ்மி (790 கி.பி. - 850 AD) இந்தியாவுக்கு வந்து ஆய்வு செய்து
 "ஹிஸாப் -அல் ஜாபர், வ -அல்முகாபிலா " (“Hisab-al-jabr-wa-al-muqabilah”)என்ற .பிரபலமான புத்தகம் எழுத  இந்திய எண் முறை இயற்கணிதம் பிரபலமானது.

Friday 1 November 2013

அடிமையாய் இருப்பதில் சுகம்



ஆணவமாய் வந்தேன் அடங்கிப் போனேன்
வேகமாக வந்தாள் மடக்கிப் போட்டாள்

ஆணவமும் அதிகாரமும் வெளியில்
அடக்கமும் பணிவும் வீட்டில்

வீராப்பும் விவேகமும் வெளியில்
உராய்ப்பும் உணர்வும் வீட்டில்

ஆண்மகனாய் உலாவருவது உலகில்
அடிமையாய் அடங்குவது வீட்டில்

அன்பை ஆயுதமாக்கி அடிமையாக்கவில்லை
காதல் கயிரால் கட்டிப்போடவில்லை

நேச வலையில்  சிக்குண்டேன்
பாசப் பிணைப்பில் இறுக்கமானேன்

காலமெல்லாம் கணவனுக்கு மனைவி அடிமை நிலை வேண்டாம்
நேசத்தால் சேவையால் உயர்ந்த உனக்கு பாசத்தால் அடிமையானேன்