Saturday 16 April 2016

சதாம் ...

சதான் ஹுசைனைப் பற்றி அவரது அறிய உயர்வான வாழ்க்கை வரலாறினை அறிந்துகொள்ளாமல் சம்பந்தமில்லாமல் தேர்தலில் பேசுபவர்...
முன்னிரவு பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல வந்து சேர்ந்துவிட்டது
நுணலும் (நுணல் = தவளை)தன் வாயால் கெடும் என்பது பழமொழி
இது கத்தி கத்தி தன் இருப்பிடத்தை பாம்புக்கு தெரியப் படுத்திவிடும் பாம்புகள் அவற்றை விழுங்கி விடும்.
தன் வாயால் கெட்ட வரிசையில் இந்த புதிய காளான்
தானும் மறைய தன்னோடு சேர்ந்தவர்களையும் மறைய வைக்க முயல்கின்றது
--------------------------------------------------------------------------------

Friday 15 April 2016

பொய்யும் மெய்யும் கலந்து வரும் தேர்தல் களம்

பொய்யும் மெய்யும் கலந்து வரும் தேர்தல் களம்
மெய்யை சொல்ல வைத்து ஊர் அறிந்து சிரிக்க வைக்குது வேட்பாளர் நிலை
நீரில் அமுத்தி வைத்த காற்றடைத்த பலூன் நீரின் மேலே வரத்தான் செய்யும்
வேட்பாளர் வழக்குகள் தேங்கி நிற்கும் நிலை
வேட்பாளர் வாக்காளருக்கு தேர்தலில் நிறைவேற்ற முடியாத தடையற்ற வாக்குகள் தரும் நிலை
உண்மையும் பொய்யும் அறிந்து தனக்கு விரும்பாதவருக்கும் கட்டுப்பாட்டில் வாக்குகள் போடும் நிலை

Saturday 2 April 2016

பள்ளிவாசலில் தொழுது வருவது சாலவும் நன்று.


தொழுவதின் சிறப்பு.

According to a latest research, walking is a useful sport to prevent some knees diseases …
நடப்பது மூட்டு வலி வராமல் இருக்க உதவலாம்..
குதிப்பதும், ஓடுவதும் நடப்பதும் எவராலும் தொடர்ந்து செயல் பட முடியாது  .
உடல் நலம் கருதி இதனை செயல்படுத்த முயல்வோரும் சில காலங்களுக்குள் நிறுத்தி விடுவர்..
ஆனால் அதனை இறைபக்தியுடன் செயல்படுவோர் ஒரு காலமும் நிறுத்த மாட்டார்கள் .
இதற்கு ஒரே வழி தொழுகை. இஸ்லாமிய முறை தொழுகை இறைபக்தியுடன் உடல் நலமும் தர வல்லது.தொடர்ந்து தொழுது வருபவர்களுக்கு கழுத்தில் உள்ள எலும்பின் தேய்மானம்(Cervical Spondylosis ) வருவதில்லை.