Followers

Tuesday, 16 May 2017

அல்பயான் அரபு செய்தித்தாளில் நீடூர் நசீர் அலியின் பணி

அஸ்ஸலாமு அலைக்கும்... வரஹ்

 துபாயில் அரபி செய்தி   தாள் அல் பயான் 37 வது ஆண்டு விழா 10-5-2017 அன்று சிறப்பாக கொண்டாட பட்டது . இதில் பணி செய்த எனக்கு 33 வருடம் மிகவும் பொறுப்புடன் வேலை செய்ததால் என்னை கௌரவித்தார்கள் எல்லா புகழம் அல்லாஹ்வுக்கே
நசீர் அலி
from: Mohdali Naseer <seasons123.naseer@gmail.com>
Mohamedali Naseerali. எனது மூத்த மகன் 
- முகம்மது அலி Mohamed Ali 

Tuesday, 9 May 2017

நீட்டே சாட்சி

அவர்கள் பாவம் (தவறு ) செய்து விட்டார்களா ?
அல்லது
நாம்தான் அவர்களை தெரிவு செய்ததில் பாவம் (தவறு ) செய்து விட்டோமா !
நீட்டே சாட்சி .
திருத்திக்கொள்ள முயற்சி செய்வது கடமைஅரை சட்டை போடு
புடவை கூடாது
வளையல்கள்
தொப்பி
குர்தா
பைஜாமா
இதெல்லாம் நீட் டுக்கு உகந்ததல்ல
அறிவு வெளிவர இதெல்லாம் தடையாகிவிடும்
மொத்தத்தில் அமெரிக்க உடை உகந்ததோ !
அவர்கள் பாவம் (தவறு ) செய்து விட்டார்களா ?
அல்லது 
நாம்தான் அவர்களை தெரிவு செய்ததில் பாவம் 
(தவறு ) செய்து விட்டோமா !
நீட்டே சாட்சி .
திருத்திக்கொள்ள முயற்சி செய்வது கடமை


-----------------------
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
-திருக்குறள் 
மு.வ : இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது..

சத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது! (அல்குர்ஆன்-17:81)

Monday, 8 May 2017

ஒன்றிலிருந்து உதிர்ந்து மற்றொன்றில் உயர்வு பெற்றதுபறக்கும் பறவைக்கு
இறக்கை பறக்க உதவுகிறது
பறவை அலகால் இறக்கையை
அலசி பறந்து போகையில்
தனி இறகாய் ஓர் இறகு
தரையில் விழுந்தது
பறவை பறப்பதற்கு விழுந்த இறகு தேவையில்லை
விழுந்த இறகு விரும்பினாலும்
பறவையின் இறக்கையோடு இணைய வாய்ப்பில்லை

Wednesday, 19 April 2017

பாராட்டுதலினாலேயே அவர்கள் மயங்க வேண்டும்

  நீ என்னை பாராட்டு நான் உன்னை பாராட்டுகின்றேன்! இது சொல்லாமல் சொல்லும் வேண்டுதல். இதனை சிலர் முன்பே திட்டமிட்டும் செயல்படுவர். உன்னை ஒருவர் உன் பேச்சுத் திறமைக்காக பேச அழைப்பார். அழைத்தவரை பாராட்டவேண்டுமல்லவா! அதோடு நிறுத்தி விட்டால் நல்லதல்ல மேடையில் உள்ளவரையும் மற்றவரையும் பாராட்ட வேண்டும்.  

    பாராட்டுதலினாலேயே அவர்கள் மயங்க வேண்டும்
பாராட்டுதல் சிறிது நேரம் அதிகமானால் கேட்க வந்தவர்கள் அந்த இடத்திலேயே தூங்கிவிட வேண்டும் அல்லது அந்த நேரத்தில் பக்கத்தில் உள்ளவர்களிடம் பேச வாய்ப்பு கிடைக்க வேண்டும் அல்லது இடைவேளை கிடைத்துவிட்டதாக முடிவு செய்து வெளியில் சென்று தேவையானதை முடித்து விட்டு வரவேண்டும்.

Wednesday, 25 January 2017

இறைவா! உன்னிடமே பாதுகாவல் தேடுகின்றேன்.

எது சுதந்திரம் ?
நல்ல நாள் கெட்ட நாள் என்பது  கிடையாது .வாழும் நாள் அனைத்தும் உயர்வான நாட்கள்தான்.
அழுக்கு சேர அதனை நீக்க முயல்கின்றோம் மனதில் அழுக்கு சேர நல்லவைகளை  கேட்டும், படித்தும்  மனதில்  படிந்த அழுக்கை அகற்ற முயல வேண்டும் . இவை நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இருப்பினும் தொடர் முயற்சி  தேவை. நீண்ட நேரம் இறைவனை வணங்கி சோர்வு அடைவதை விட தொடர்ந்த தொழுகை வாழ்கையை பண்படுத்தும்
நல்லதை செய் அதை இன்றே செய் .
வாழு, வாழ விடு
இன்று உனக்கு தேவைப் படாதது நாளை அது அவசியமாகிவிடலாம் .
விரயம் செய்வதைக் காட்டிலும் தர்மம்  செய்து நன்மையை அடைந்துக் கொள் .

இறைவன் படைப்புகளில் மனித படைப்புதான் உயர்வானது .


மனிதனுக்குள் எத்தனையோ ஆற்றல்கள் ஒளிந்துக் கொண்டிருந்தாலும் அதனை வெளிக் கொணர ஒரு ஊக்கமும்,முயற்சியும் தேவைப்பட்டாலும் அதனைத்  தூண்ட ஒரு ஆசிரியர் தேவை .அந்த ஆசிரியர் உதவி கிடைக்காமல் சிறப்படையமுடியாது .விளக்கு ஒளி கொடுக்க எண்ணை தேவை. ஆசிரியர் இல்லாமல் முதலில் படிக்கப் பழகுவது  இருளில் தூசியை அகற்ற விளக்குமாறு கொண்டு கூட்டுவதுபோல் ஆகிவிடும், நமக்கு முதல் ஆசிரியராக அமைவது நம் தாய்தான் அவள் நற்சொல் பேசுவதிலும்,உற்சாகம் கொடுப்பதிலும்,அரவணைத்து போவதும் மற்றும்  தன் நன்னடத்தையாலும் தன்  குழந்தைக்கு சிறந்த ஆசிரியராக இருக்க முடியும் அதற்கு உரு துணையாக இருப்பது தந்தையும் மற்றும் நல்ல  சூழலில் வளர்வதுமாக  இருக்கும்.
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்;
-2:29. குர்ஆன்

காட்சிப் பொருளாக மாறிய மனிதன்

அனைத்து பாதுகாப்பு வேலையும் மோசமானதாக இருக்கும். ஆனால் சில பாதுகாத்து வேலைகள் உடல் நலத்தை பாதிக்கக் கூடியதாக இருந்து வருகின்றன.அதிலும் இரவு நேர வேலைகள் மிகவும் அபாயகரமான வேலைகளாக உள்ளன.
மிகவும் பிரபலமான பக்கிங்காம் அரண்மனையின் சில காவலர், கடமை வீரர்கள் வேலை உலகின் மோசமான வேலைகளாக கூறப்படுகிறது. அவர்கள் எரிச்சலூட்டும்படியாக பல மணி நேரம் நின்று காவல் காப்பதுடன் காட்சிப் பொருளாக மாறிய பொம்மையாக மாறி காட்சி அளிக்க வேண்டும். அந்த காவலர்கள், சிரிக்க முடியாது, உணர்ச்சிகளை காண்பிக்க முடியாது, மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பதிலளிக்க முடியாது என்ற  பல விதிகள். தினமும் அவர்கள் சீருடை துவைத்து சலவை செய்ய வேண்டும். சிப்பாய் போன்ற கூடுதல் கடமை .கடமைகளில் தவறு நேர்ந்தால் கடுமையாக தண்டிக்கப் படுவார்கள்.
நாகரீகம் வளர்ந்த நாட்டில்  விந்தை மனிதர்களாக, காட்சிப் பொருளாக மாறிய மனிதன். மற்றவருக்கு  மகிழ்வை தந்து தன்னை வருத்திக் கொள்ளும் மனிதன்.