Sunday, 22 February 2015

நேர்மை உயர்வைத் தரும்

நேர்மையை நேசித்தேன்
நேர்மையானவர்களை சந்திக்க முடியவில்லை
நேர்த்தியாகச் சொல்லி பொய்மையை விற்றுக் கொண்டிருக்கின்றார்கள்

நேர்மையாக தொழில் செய்தேன்
நேர்த்தியான தொழில் வல்லுனர்கள் உடனிருந்து உதவினார்கள்
நேர்மையும் நேர்த்தியும் புதுமையும் ஒன்றுசேர உயர்வானது உழைப்பு
நேர்மை உயர்வைத் தர
உயர்வின் அருமை
பொறுமையைத் தந்து
மகிழ்வையும் தந்தது

Tuesday, 17 February 2015

குற்றங்கள் மறைய சுற்றங்கள் நிறையும்

இன்றைய ஆய்வு
நாளைய தவறு
இன்றைய முடிவு
நாளைய தவறு

சரியோ தவறோ மனம் ஒன்று பட்டு திருமணத்தில்
இணந்து ஒன்றுபட அனைத்தும் சரியாகும் உங்களுக்கும் ஒரு வாரிசு வர

நல்லவளா ,நல்லவரா என்று கண்டறிய காதல் செய்து கண்டபடி நபர்களை மாற்றிக் கொண்டிருப்பது காதல் அல்ல .அது வேடிக்கை பார்க்கும் படமாகிவிடும்

காதலித்துக் கொண்டே இருக்கின்றேன்
காதல் நாட்களுக்குள் அடங்காது
காதல் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்
காதல் சுவனத்தில் நிச்சயிக்கப்பட்டது

செய்த குற்றங்கள் கரு மேகங்களாய்
நிற்கச் செய்து இருள்களாய் சூழ்ந்து விட்டன

தவறுக்கு வருந்தி கண்ணீர் வழியட்டும்
மேகங்களும் குளிர்ந்து மழை பொழிய இருள் நீங்கும்

குற்றங்கள் மறைய
சுற்றங்கள் நிறையும்

சுற்றும் ஆட்சி சுழலும் உலகம்போல்

சுற்றும் ஆட்சி சுழலும் உலகம்போல்

மன்னர் ஆட்சியில் தவறுகள் நிகழ
சர்வாதிகாரி தொடர
சர்வாதிகாரி ஆட்சியில் தவறுகள் நிகழ
பிரபுகள் ((மேற்குடி மக்கள்) ஆட்சிக்கு வர
பிரபுகள் ((மேற்குடி மக்கள்) ஆட்சியில் தவறுகள் நிகழ
மக்களாட்சி மலர்கின்றது
மக்களாட்சி ஆட்சியில் தவறுகள் நிகழ
திரும்பவும் தனி மனிதனின் ஆட்சிக்கு மாறுகின்றது
இது தொடர்நிலையாக சுற்றுகின்றது

நல்லாட்சி நிலையாக இருக்க
மக்கள் நன்மையை பெறும்வரை

தோல்வி தொடர் நிகழ்வல்ல
வெற்றியும் தொடர் நிகழ்வல்ல
வெற்றி ஒருவரோடு நின்றுவிட்டால்
தோல்வி மற்றொருவரை ஊக்குவிக்காது
மாற்றமே உலகின் தொடர்ச்சி

காதல் சந்திப்பு

சந்திக்க
வாய்பிருந்தும்
சந்திக்காமல் நழுவ விட்டேன்

சந்திக்க
வாய்பைத் தேடுகின்றேன்
சந்திக்க
வாய்பைத் தராமல்
நழுவுகின்றாய்

சந்தேகம்
சந்தோசத்தை
சல்லடையாக்கியது

Wednesday, 4 February 2015

வாசிப்பது வாழ்வோடு ஒன்றியது


வாசிப்பது பல நிலைகளில் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளது
வாசிக்கும் திறன் மனித இனத்திற்கு மட்டும் தரப்பட்ட உயர்வு நிலை
வாசிப்பது பல வகையாக உள்ளது
வாசிப்பது தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் இருக்கலாம்
தாய் தனது குழந்தைகளுக்காகவும் வாசிக்க முற்படுகின்றாள்
கற்று அறிந்த ஆசிரியரும் மாணவர்களுக்கு கற்பிக்க வாசிக்க வேண்டிய அவசியமாகின்றது
சிலவற்றை மேலோட்டமாக வாசிக்கின்றோம்
சிலவற்றை ஆழ்ந்து வாசிக்கின்றோம்
சிலவற்றை ஆழ்ந்து வாசித்து நினைவில் நிறுத்திக் கொள்கின்றோம்
சிலர் பொழுதுபோக்கிற்காக வாசிக்கின்றார்கள் அல்லது இரவில் தூக்கம் வருவதற்காக வாசிக்கின்றார்கள்

Monday, 2 February 2015

நண்மையான காரியங்கள் நிகழ எந்த மார்க்கமும் தடையாக இருக்கக் கூடாது

நாம் உணர்வுப்பூர்வமாக சாதி, நிறம், மற்றும் மதநம்பிக்கை
அனைத்திலும் தீமை தரும் எல்லையை கடந்து நாம் மனித நேயத்தை நிர்ணயிப்பதிலிருந்து மட்டுமே
நாம் உயர்வு நிலை அடைய முடியும்
.நாம் பின்பற்றும் மார்க்கமும் சிறப்படைய முடியும் .
ஒருவருக்கொருவர் அன்பு மற்றும் இரக்கமான சூழ்நிலையை உலகில் கொண்டு வர வேண்டும்
எல்லா நிகழ்வுகளிலும் மனிதன் மதிக்கப்பட வேண்டுமென்ற தகுதியை மனிதர்கள் அனைவரும் பார்க்க வேண்டும். -