Thursday, 23 November 2017

அருளாளனிடத்தில் அளவற்று கேட்டேன் .........

அருளாளனிடத்தில் அளவற்று கேட்டேன் .........
அருளாளன் அளவற்று கேட்டதையும் கேட்காததையும் கொடுத்தான்
அவனிடத்தில் வலுவான அறிவை கேட்காமல் விடுத்தேன்
அவனுக்கென்ன அவன் அவனை நேசிப்பவர்களுக்கும் நேசிக்காதவர்களுக்கும் இவ்வுலகில் தருவதில் தயக்கம் காட்டுவதில்லை
கேட்டதுதான் கேட்டேன் அறிவை அதிகமாக கேட்காமல் விட்டேனே
அபிவிருத்தி செய்யப்படாத அறிவால் அவனால் கிடைத்தவைகள் சிக்கல்களால் ,சிரமங்களால் சீக்கிரமே வலுவுள்ளவர்களால் பறிக்கப்பட்டன
அவன் அறிவான் என் தேவைகள் என்று அவனை தொழுது
"ரப்பி ஜித்னி இல்மா"( رَّبِّ زِدْنِي عِلْمًا
“இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!”

Wednesday, 22 November 2017

இறைவனின் அருட்கொடை பொழிகின்றது

மேகம் வர மழை வருமாம்
மின்னல் வெட்ட இடி வருமாம்
மேகம் மோத இடியோசை வருமாம்
இடியோசைக் கேட்டு மேகம் மிரண்டு ஓடியதோ


மழையைக் கண்டு  வருடம் தாண்டி விட்டது
தூசி மழை ஊரெல்லாம் பெய்கிறது.
குளங்கள் வற்றிக் கிடக்கின்றன .
வயல்கள் வீடாகி விட்டன
வீட்டை சுத்தம் செய்ய ஆள் இல்லை
கட்டிய வீட்டிலும் வாழாமல் வெளிநாடு வாழ்க்கை
ஊருக்குள் ஒற்றுமை குறைகிறது

பழைய இனிய மகிழ்வான பசுமை வாழ்க்கை பறந்து விட்டது
பயிர்களும் காணோம் ,வெற்றிலையைக் காணோம்
நன்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் இறைநம்பிக்கை கூடுகிறது
நீர் கிடைக்காத நிலையோ அல்லது வெயிலின் கதிர் வீச்சால் காய்ந்த மனமோ
சிலர் தவறான தண்ணீரை குடிக்கும் வேதனை


Monday, 20 November 2017

அழியா நினைவுகள்

கடல் அலை வீசியதோ 
காதல் வலை வீசியதோ
நேசம் கொண்டு பாடினாயோ !
காதல் கொண்டு பாடினாயோ!
அன்புள்ளம் கொண்டு அந்த
'அன்புள்ள அத்தான் பாடலை ..'
'அந்த 'ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்....'
************

முதுமை வந்தால்

முதுமை வந்தால் 
வாயை கட்டுப்படுத்து
வாயை கட்டுபடுத்துவது உண்பதற்கும் 
வாயை கட்டுபடுத்துவது பேசுவதற்கும்
எழுதுகோளை எடுத்து எழுதாதே
எழுதுவதெல்லாம் பிழையாக இருக்கும் 
எழுதுவதெல்லாம் உண்மையாக இருக்கும்

Sunday, 19 November 2017

'பேனாவின் முனை வாளின் முனையைவிட கூர்மையானது'.

வாளின் முனையைவிட பேனாவின் முனை கூர்மையானது’
"The Pen is Mightier than the Sword" 
சொல் வீச்சு சக்தி வாய்ந்தது; வாள் வீச்சு பலவீனமானது.
பேனா வழக்கமாக எழுத்து மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் தன்னுடைய எண்ணங்களை காகிதத்தில் பதிவு செய்ய உதவுகிறார்.
 வாள் யாரோ எதிராக கட்டாயமாக பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதம்.
ஒரு வாள் உடல் ரீதியாக பொருத்தப்பட்டவரால் மட்டுமே நன்கு இயங்க முடியும். ஆனால் வார்த்தைகள்  ஒரு பலவீனமான மனிதன் கூட பேனா இருந்தால் , அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்றால், அவர் விரும்பும் விளைவை வார்த்தைகளை பயன்படுதி  ஒன்றை ஆக்கவும் அழிக்கவும் முடியும்   எழுத்தாளர்களின் எழுத்துகளின் விளைவினால்  பெரிய பிரஞ்சு புரட்சி உண்டானது  .

Saturday, 18 November 2017

தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன்

தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன்
தீனிசைத் தென்றல், அமீரகத் தமிழ்ப்பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார். அண்ணன் தாஜுதீன் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பது நமது கடமை. நாம் கொடுக்கும் ஊக்கம் அவருக்கு உற்சாகத்தினை தந்து அவரது சேவை அதிகமாக அல்லாஹ் அருள் செய்வான்.
தேரிழந்தூர் தாஜுதீனின் பெற்றோர் : அப்துல் சத்தார் , நூருன்னிஷா.
தேரிழந்தூர் தாஜுதீன் 1962-ல் தேரிழந்தூரில் பாடத் தொடங்கினார். அல்லாஹ்வின் அருளால் 1976 ஆண்டு இறவாஞ்சரியில் முதல் மேடை. பதிவான பாடல்கள் 200க்கு மேல்.

Wednesday, 15 November 2017

நீங்கள் எப்படி ஒரு தீர்ப்பை வழங்குவீர்கள்

முஆத் இப்னு ஜபல் (RA)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஹலால் மற்றும் ஹராமில் எனது நாட்டிலேயே அதிகமான கற்றறிந்த மனிதர் முஆத் இப்னு ஜபல் (RA)' என்று தெரிவித்துள்ளார்கள்
. ஏமன் நாட்டில் அப்பொழுது மிகவும் மோசமான நிலையில் மக்கள் மிகவும் தவறுகள் செய்பவர்களாக இருந்தனர்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஆத் இப்னு ஜபல் (RA) அவர்களை கவர்னராக யமன் நாட்டிற்கு (ஆட்சி நடத்தவும் பிரசாரம் செய்யவும்) அனுப்பினார்கள் அனுப்பியபோது,
​​'நீங்கள் எப்படி ஒரு தீர்ப்பை வழங்குவீர்கள் அல்லது ஒரு சர்ச்சைக்கு தீர்வு காண்பீர்கள் ?' என்று கேட்க

Monday, 13 November 2017

மக்களை எக்காலத்திலும் நேசிக்கவே செய்கின்றார்கள்

இஸ்லாத்தில் பிரிவே இல்லை ஆனால் முஸ்லீம்களின் இறை வணக்க செயல்முறைகளில் .கொள்கையில் சரித்திர நம்பிக்கையில் சில மாறுபாடுகள் தடுமாற்றங்கள் இருக்கின்றது என்பதை மறுக்க முடியுமா?
அதன் காரணங்களை ஆய்வு செய்வது முக்கியமல்ல அதனை ஆய்வு செய்ய முற்பட இன்னும் பிரிவுகள் உண்டாகலாம் .
சரித்திர நிகழ்வுகளை பார்த்து கேட்டு சொன்னவர்கள் அதற்க்கு விளக்கம் கொடுத்தவர்கள் சிலவற்றிற்கு மாறுபட்டிருந்தாலும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை மற்றும் நம்பிக்கை சிறப்பாகவும் மாற்றத்திற்கு இடமில்லாதவையாகவும் இருக்கின்றன .

Wednesday, 8 November 2017

நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்

உனது கண்கள் அந்த எண்ணங்களைப் பேசுகின்றன,
உனது குரல் ஒருபோதும் அதனைச் சொல்லவில்லை
உனது வலி மற்றும் துக்கம் அனைத்தும் மறைத்து
உனது மென்மையான இதயத்தோடும் இரக்கத்தோடும்
உனது வாழ்க்கையை ஒரு புதிய அர்த்தத்தை கொடுத்தாய்,
உன் பாசம் முடிவடையாதது
ஒவ்வொரு கணமும் அது ஒரு புதிய ஆரம்பம்
உன் வார்த்தைகள் மற்றும்
உன் நிலையான கவனிப்புடன்
உன் மென்மையான தொடுதல்
அது என் மனதை விட்டு போகும் போது
அமைதியான இறுதி தான்
எனக்கு முடிவு