Followers

Saturday, 31 October 2015

பெண்ணில்லா உலகில் வாழ்வேது

பெண்ணின் படைப்பு உயர்வானது
பெண்ணின்றேல் நாமில்லை
பெண்ணாக வந்தால் அம்மா
பெண்ணால் வந்த உறவுகள் நீடிக்கும்
பெண்ணால் வாரிசுகள் வளரும்
பெண்ணின் பணிவிடை பாசமானது
பெண்ணின் பணிவு இயல்பானது
பெண்ணிடம் கணிவு மேன்மையானது

பெண்ணின் ஊக்குவித்தல் ஆண் வெற்றிக்கு அடித்தளம்
பெண்ணின் பெருந்தன்மை ஆண்களுக்கு அமைதியைத் தருகிறது
பெண்ணின் பெருமை ஆண்களை சிறப்பிகின்றது
பெண்ணின் பெருமை மேலோங்க பார்வையை தாழ்த்திக் கொள்வார்கள்
பெண்ணின் அழகு அவர்களது உள்ளத்தில் ஆடையில் அல்ல
பெண்ணில்லா உலகில் வாழ்வேது
பெண் பெற்ற கல்வியால் குடும்பமே உயர்வடைகின்றது
பெண்ணைப் பெற்றோர் பாசத்தைக் காட்டுவார்
பெண் பிள்ளை பெறாதவர் பரிதாபத்திற்குரியவர்..
பெண்ணின் மனது இறக்கம் கொண்டது அன்பிற்கு அடிமையாகக் கூடியது.

No comments:

Post a Comment