Saturday 26 December 2015
தீனைப் பெற்றோர் வெற்றிப் பெற்றோர்
தீனைப் பெறுதல் நெறியைப் பெறுதல்
தீனைப் பெறுதல் ஞானம் பெறுதல்
ஞானத்தின் திறவுகோல் நாயகம்
தீனைப் பெற்றோர் வெற்றிப் பெற்றோர்
தீனை விட்டோர் தானும் கெட்டார்
தீனில் தேடல் வாழ்வின் வழி தேடல்
தீனில் இல்லாததை புகுத்தி
தீனில் சொல்லாததை மனதில் நிறுத்தி
தீனையும் கெடுத்தார் தானும் கெட்டார்
தீனில் ஆய்வு கொள்வீர்
தீனின் ஆய்வால் அறிவு பெற்று இறைவனின் மகிமையை அறிவீர்
தீனில் வீண் விவாதம் செய்து தானும் கெட்டு மற்றவரையும் கெடுக்காதீர்
தீனில் வாதம் செய்து போட்டி போட்டு பெருமை கொள்ளாதீர்
தீனின் வாழ்வில் போட்டி இல்லை பொறாமை இல்லை
தீனில் உயர்ந்தோரில்லை தாழ்ந்தோரில்லை
தீனின் வாழ்வில் நிம்மதி உண்டு, நிறைவு உண்டு, மகிழ்வு உண்டு
*தீன் எனும் அரபுச் சொல்லின் பொருள் இஸ்லாமிய நெறியாகும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment