Monday 28 March 2016

கிடைத்ததை கொடுப்பார் இன்னும் கொடுப்பதில் நாட்டமும் செயலும் கொண்டவர்

அப்பெண் ஒரு புகழ் பெற்ற செல்வந்த தம்பதிகளின் ஒரே பெண் வாரிசு .
அப்பெண் ஒரு இளவரசி போல் இறைபக்தியோடு வளர்க்கப் பட்டவர் .
அப்பெண் ஞானம் பெற்ற பெண்
அமமூதாட்டி தனது குழந்தைப் பருவத்திலிருந்தே கண்ணியமாக. மென்மையாக பேசுபதையே தன இயல்பாகக் கொண்டவர்
அமமூதாட்டி இரவு நேரங்களிலும் ஓதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்
அவர் தஹஜ்ஜத்( பின்னிரவுத் தொழுகை)தொழுகையும் விட்டதில்லை
(இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக-குர்ஆன்:17:79.)

அமமூதாட்டி மற்றவருக்கு கையில் கிடைத்ததை கொடுப்பார் இன்னும் கொடுப்பதில் நாட்டமும் செயலும் கொண்டவர்

                                          (அமமூதாட்டி  எழுதியது )

அல்லாஹ் அவர் வழியே நிறைய வாரிசுகளும் தந்துள்ளான்
அவரது வழி வந்த மக்களுக்கும் இறைநேசத்திலும் கொடுக்கும் மனதிலும் அமமூதாட்டியின் உயர்குணமே தொடர்கின்றது

                                                    (அமமூதாட்டியின் இல்லம்)

அமமூதாட்டி எதற்கும் கலங்குவதில்லை நடப்பதெல்லாம் இறைவன் நாட்டப்படியே நடக்குமென்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்
அமமூதாட்டி தன்னை மிகைபடுத்திக் கொள்வதுமில்லை மற்றும் தன்னை யாரும் மிகைபடுத்திச சொல்லவும் விரும்புதுமில்லை
அமமூதாட்டிக்கு அல்லாஹ் நீடித்த ஆயுளையும் ஆரோக்கியமான உடல்நலத்தையும் தந்தருள இறைவனிடம் இறைஞ்சுபவர்கள் அதிகம் (ஆமீன்)
அல்லாஹ்! அமமூதாட்டிக்கு இம்மையிலும் மறுமையிலும்
எல்லாவிதத்திலும் உன்னுடைய ரஹ்மத்தை அருள்வாயாக(ஆமீன் )

நாம் கேட்கும் பிரார்த்தனைகள் வேண்டுதல்கள் மற்றவர்களுக்கும் சேர்ந்து கெடப்பதையே இறைவன் விரும்புகின்றான்

அல்லாஹ்விடம் இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டுதல்.
நபி (ஸல்) அவர்கள் ‘ரப்பனா ஆத்தினா ஃபித் துன்யா ஹஸனத்தன் வ ஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வக்கினா அதாபந் நார்” என்றே அதிகமாகப் பிரார்த்தித்து வந்தார்கள். (பொருள்: எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் நன்மை அருள்வாயாக. மறுமையிலும் நன்மை அருள்வாயாக. நரகத்தின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக

3 comments: