Friday 17 June 2016

முஸ்லீம் விஞ்ஞானிகளில் சிலர்

உலக முஸ்லீம் விஞ்ஞானிகளில் சிலர் / Muslim scientists of the world 

இஸ்லாமியர்களில் விஞ்ஞானம் கண்டுபிடிப்புகள் கணக்கிலடங்காதவை
கி .பி. 700 முதல்1200 வரை இஸ்லாமியர்களின் கண்டுபிடிப்புகள் ஏராளம் .
முஸ்லிம்கள் கண்டுபிடிப்புகளில் ஒன்று கூட மக்களை அழிக்கக் கூடிய கண்டுபிடிப்புகளாக இருந்ததில்லை.
முஸ்லிம்கள் மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு துறைகளில் தங்கள் பங்களிப்புகளை உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தந்துள்ளார்கள் .அவர்கள் விஞ்ஞானத்திலும் சிறந்த சேவை செய்துள்ளார்கள்.
அந்த விஞ்ஞானிகள் மார்க்க பற்றிலும் தங்களை உட்படுத்திக் கொண்டு சிறந்த சேவை செய்துள்ளார்கள்.
அவர்களது உடுத்தும் உடைகள் மற்றும் வாழ்வின் நெறி முறைகள் அனைத்தும் இஸ்லாமிய அடிப்படையிலேயே இருக்கும்.
----------------------------------

அறிவு சார்ந்த சமுதாயமே இனி வரும் காலங்களில் அனைத்து வகைகளிலும் முன்னேற்றம் காண முடியும் அதிகாரமும் அவர்கள் கையில் நிற்கும் .
தேவையான கல்வி இல்லாமையும அதனை முறையாக பயன் படுத்தாமையும்தான் பின்தங்கிய நிலையில் நம்மை நிறுத்தி வைகின்றது .அதிலும் ஒற்றுமை அற்ற குணம் மேலோங்கி நிற்கின்றது இது இஸ்லாத்திற்கு உடன்பாடானதல்ல
நாம் அனைவரும் அல்லாஹ்விடம் எங்கள் தோல்விக்கு நாங்களே வழி வகுத்துக் கொண்டோம் . இறைவா ! நீ அனைத்து வளங்களையும் தந்தாய் நாங்கள்தான் அதனை முறையாகப் பயன்படுத்தவில்லை என மன்றாடி மன்னிப்பு கேட்டு இனியாவது நாங்கள் நீ கொடுத்த அறிவை விசாலமாக்கி அந்த அறிவைக் கொண்டு உன்னை தொழுவதோடு உன்னால் கொடுக்கப்பட்டதனை முறையாகப் பயன் படுத்தி இன்ஷா அல்லாஹ் ஆற்றல் மிக்க முஸ்லிம்களாக இருக்கின்றோம் அதற்க்கு நீயே துணை நின்று அருள்வாயாக! ஆமீன்
--------------------------------
அன்புடன் ,
முகம்மது அலி ஜின்னா







No comments:

Post a Comment