Saturday, 28 April 2018

ஏன் இந்த கோபம்!

ஏன் இந்த கோபம்!  இப்படி ஏன் என்னை உதறி விட்டு எழுகிறாய் !

அன்பே! ஆருயிரே உன் மடிமீது படுத்து உறங்குகிறேன்
இருளிலும் ,பகலிலும் ,இந்த உலகிலும் மறு உலகிலும் உன்னுடன் இருப்பேன்
இப்படியே இந்த மடிமீதே என் உயிர் போவதிலும் நான் மகிழ்வேன் .
ஏன் இந்த கோபம் இப்படி என்னை உதறி விட்டு எழுகிறாய் !

நான் இருக்க நீங்கள் போவதா !
நான் விதவை என்ற பட்டத்தை சுமந்து நிற்பதா !
நான் உங்களை மடிமேல் சுமப்பதில் சுகம்
நான் விதவையான வாழ்வை விரும்பவில்லை.

Friday, 27 April 2018

பேத்தி நபீளா தீனியாத் மக்தப் மதரசா பரிசளிப்பு நிகழ்வில்

பெண் குழந்தைகள் ஆர்வ மிகுதியால் சான்றோர் நிறைந்த சபையில் பேச முயல்கின்றனர் .அவர்களை உற்சாகப்படுத்துவது நமது கடமை .அவர்களது சிறு பிழைகளை சுட்டிக்காட்டி அவர்களது ஆர்வத்தை தடுத்து விட வேண்டாம்
அன்புடன்

வெற்றி என்ன?


1 வருட வயதில் ... * வெற்றி. *
நீங்கள் ஆதரவு இல்லாமல் நடக்க முடியும்

* 4 வயதில் ... * வெற்றி. *
நீங்கள் உங்கள் உடையை சிறுநீர் கழிப்பதில்லை,

* 8 வயதில் ... * வெற்றி .. *
வீட்டிற்கு திரும்பும் வழியை அறிய

* 12 வயதில், * * வெற்றி .. *
நண்பர்கள் இருக்க வேண்டும்.

* 18 வயதில், * * வெற்றி. *
ஒரு ஓட்டுநர் உரிமம் பெற

வாழ்க்கை

 * வாழ்க்கையில், அதிர்ஷ்டம் மற்றும் அபாயங்கள் கணிக்க முடியாதவை, ஒருவர் எவ்வளவு காலம் வாழ்கிறார் என்று யாருக்கும் தெரியாது.


 தாயும் தந்தையும்  தவிர,  நல்வழியில் நடத்துவதற்கு யாரும் பொறுப்பு இல்லை.
நன்மையுணர்வோர்,  அதை புனிதப்படுத்த வேண்டும், நன்றியுடன் இருக்க வேண்டும், மேலும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. ஒரு நபர்  நல்லது செய்தால், அவர்  உண்மையாக இருப்பார் என்று அர்த்தமல்ல.

இந்த  உலகில் இருந்தவை எதுவும் நம்மை தொடர்ந்து வருவதில்லை
இது  புரியும்போது, ​​நம்மை  சுற்றியுள்ளவர்கள் இனிமேல் நமக்கு  விருப்பமில்லையென்றாலும் அல்லது நாம் விரும்பியதை இழந்தபோதும் வாழ்க்கையில் நாம்  எளிதாகப் போகலாம்.


Monday, 23 April 2018

தாவாவும் தப்லிக்கும் !


தாவா என்றால் அறிவித்தல் தப்லிக் என்பது பரப்புதல் அதாவது இஸ்லாமிய வழிபடும் முறைகளும் மற்றும் அதன் கொள்கைகளையும் மக்களுக்கு ஏற்றி வைத்தல் என்பதாகும் . இதனை கையாளும் முறைப்பற்றி முஸ்லிம்களிடையே பல கருத்து வேறுபாடு உள்ளது . அதனைப் பற்றிய விவாதங்களில் ஈடுபட விரும்பவில்லை .இங்கு தெரிந்த சில விளக்கம் தர விருப்பம். ஆண்டவன்தான் அதன் உண்மைநிலையை அறிவான் .

“தாவத்”- என்றால் அழைப்புப் பணியைச் செய்தல் ஆகும் . தாவத் என்பது தாவுதலாகாது .அதாவது மத மாற்றத்திற்கு செயல் படுவதாக கருதுவது மடமை, இஸ்லாம் சொல்லியபடி இறைவனை தொழும் மற்றும் அதன் நற்காரியங்களில் மற்றவர்களையும் ஈடுபட தங்கள் வசம் அவர்களயும் இணைந்துக் கொள்ளும்படி மக்களை மார்க்க வழியில்அழைப்பதுதான். இந்த தாவாவின் சிறப்பாகும் .இது நபிமார்களும் அவர்களது தோழர்களும் மற்றும் அவர்கள் வழி வந்தவர்களும் செய்த சேவையாக கருதப்படுகின்றது . முஸ்லிம் மக்களில் சிலர் இந்த தாவத் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர் , அவர்களில் மிகவும் படித்தவர்களும்,செல்வந்தர்களும் அடங்குவர் .

கவனியுங்கள்

அழுகிறேன் ஆனால் நான் கண்ணீர் சிந்தவில்லை
யாரும் என்னை நினைக்கவில்லையாதலால்

ஏன் என்னை குற்றம் சாட்டுகிறார்கள்?
நான் வலியை மறைக்க சிரிக்கிறேன்
என் சிரிப்பு சத்தமாக இருக்கிறது, ஆனால் கேட்க முடியாது

மின்சாரம் கிடைக்காததால் அலுவலகம் இயங்கவில்லை
வெளிக்காற்று வீசும்போது, ​​நான் தூங்குகிறேன்
ஏன் என்னை குற்றம் சாட்டுகிறார்கள்?

 சாப்பிடுகிறேன் ஆனால் என் வயிறு நிரம்பியதில்லை
என்னைச் சுற்றியுள்ள உலகம் "ஆஹா!"
நான் "எப்படி?" அப்படி "ஆஹா!" என்றில்லை

Wednesday, 18 April 2018

அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி.

 உணவு மற்றும் அடிப்படை தேவைகள் அனைவருக்கும் மலிவாக கிடைக்க வேண்டும். இது அனைவரும் விரும்புவது.  இதற்கு  வழி என்ன?    எல்லோருக்கும் இது ஒரு கனவாக  காட்சி தருகின்றது. பல முயற்சிகள் அரசும் எடுத்து வருகிறது. அது எந்த அளவு வெற்றி பெற்றுள்ளது!    அடிப்படை தேவைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகள் மடமடவென உயர்ந்துக் கொண்டே இருக்கின்றது.  ஆட்சி செய்வோர்களின் முறை மட்டும்   இதற்கு  காரணமாகிவிடுமா!   அரசாங்கம் தொழிலாளர்களின் சம்பளத்தைக் உயர்த்திக் கொண்டே.  இருக்கும் போது, பொருட்களின் விலையும்  தொடர்ந்து  அதிகரிக்க ஆரம்பிக்கின்றது. அரசாங்கம் பெட்ரோல் விலையை  அதிகரிக்கிறது அதனால்  பொருட்களின் விலையும் அதிகமாகிறது. பெட்ரோல் விலை குறைப்பு இருக்கும் போது பொருட்களின் விலையில் எந்த குறைப்பும்  இல்லை. பொருட்கள் மற்றும் அடிப்படை தேவைகளை விலை அரசாங்கத்தின் கையில் ஆனால் வணிகர்கள் மற்றும்  மொத்த விற்பனையாளர் பொருள்களின் விலையை அதிகரிக்கும்  போது, அரசாங்கம் தடுத்து நிறுத்துவது கிடையாது .

மின்சாரம் சொல்கின்றது .

மின்சாரம் என்று அழைக்கப் படும் என்னை இறைவன் மின்னல் வழி உண்டாக்கினாலும் மனிதனுக்கு அறிவைக் கொடுத்து பல மாற்றங்களுக்கு உள்ளானேன்.
ஃபர் துணியை அம்பர் மீது தேய்ப்பதைக் கொண்டு இரண்டுக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு நான் (மின்சாரம்) உண்டாவதாக பண்டைய கிரேக்கர்கள் கண்டுபிடித்ததாக என் (மின்சார) வரலாறு சொல்கின்றது .
பெஞ்சமின் பிராங்க்ளின் அவர்கள் எனது தந்தை என்றும் சொல்வார்கள்.
நான் உருவானதின் மாற்றங்களும் வினோதம்தான்.
ஆனால் நான் தமிழ்நாட்டில் படும் அவதியை யாரிடம் சொல்வது . நான் மலடியாம் , உரு முறையாக தங்காமல் கலைந்து விடுகின்றதாம் .நான் என்ன செய்வது !

என் கணவன் அரசு என்னை சரியாக கவணிப்பதில்லை.அவருக்கு பல வேலை. பாவம் அவர்! ஏழை, எளியமக்களின் நலனுக்காக பாடுபடும் என் அரசு,

Tuesday, 17 April 2018

பயணம் சென்றதில் பெற்ற அனுபவங்கள்



 பயணம் செய்வதில் ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். அது பணத்தினை வீண் செலவு செய்வதாக அமைந்துவிடக் கூடாது. நம்மை நாமே சுற்றிக் கொண்டிருக்காமல் பல்வேறு மக்களை சந்தித்து பலவிதமான மக்களின் அறிவினை உள்வாங்கிக் கொள்வதில் நோக்கமாக பயணம் செய்வது சிறந்த முறையாகும் .
பயணம் செய்து பார்த்து கிடைக்கும் அறிவு  மனதில் ஆழமாக பதியும்.
ஒருவர் பயணம் போகும் பொழுது ..
அவரை வாழ்த்தி அனுப்புகின்றோம்
அவரிடம் பயணத்தில் உள்ள சிலருக்கு 'சலாம்' வாழ்த்துகள்
சொல்லச் சொல்கின்றோம்

Monday, 16 April 2018

சுயப் ஹஜ்ரத் அவர்கள் சொற்பொழிவு

ஜின்னா தெரு பள்ளி பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சிகள்.

Monday, 9 April 2018

செல்வத்தைவிட மேலானது

செல்வத்தைவிட சிறந்த செல்வம் மன அமைதி
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

இறைவனை நேசித்து அவனை நேசிப்பவருக்கு
இறைவனது அருள் பெற்றவருக்கு மன அமைதி கிடைக்கும்
செல்வம் தீங்கிழைக்காது, அதை சரியான முறையில் பயன்படுத்துவதால்

Sunday, 8 April 2018

ஸல்லல்லாஹ் பாவா


சல்லல்லா பாவாவும்(தலையில் பேட்டா) மர்ஹூம் நாஜிர் N.P.முஹம்மது இப்ராஹீம் ஹஜ்ரத் அவர்களும் தலையில் வெள்ளை தொப்பி )
***********************
ஸல்லல்லாஹ் பாவா பற்றித் தெரிந்த விவரங்கள் நிறையவே உள்ளன .ஆனால் அவர்கள் பிறந்தது வளர்ந்தது அவர்கள் குடும்பம் பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரியாது
நான் அறிந்த வரை சொல்கின்றேன்
நாங்கள் சிறு வயதாக இருக்கும்போது அவர்களை பெரியோர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை மிகவும் நேசிப்பார்கள் .அவர்கள் குழந்தைகளை ஸல்லல்லாஹ் ஓதச் சொல்வார்கள் அவரது கையில் ஒரு உண்டியும் பையும் இருக்கும் .ஓதும் குழதைகளுக்கு மிட்டாய் கொடுப்பார்கள் .அந்த சிறிய மிட்டாய்க்கு ஸல்லல்லாஹ் பாவா மிட்டாய் என்றே பெயர் வந்து விட்டது
அவர்கள் உண்டியில் சேர்ந்த பணத்தை வைத்து சீர்காழி அருகில் உள்ள புத்தூரில் பள்ளிவாசல் கட்டி உள்ளார்கள்
அனைவரிடத்திலும் மிகவும் பாசம் அதிகம் ஆனால் தவறைக் காண கண்டிப்பாக இருப்பார்கள்

Sunday, 1 April 2018

பாரிஸ் பயணம் - Paris Trip

"He who does not travel does not know the value of men." -- Moorish proverb

"Love is the only flower that grows and blossoms Without the aid of the seasons." - Kahlil Gibran quotes

"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Tzu

"Travel and change of place impart new vigor to the mind." -- Seneca

"A wise traveler never despises his own country." -- Carlo Goldoni

You cannot change the circumstances, the seasons , or the wind, but you can change yourself. That is something you have charge of." Jim Rohn

The pleasant trip to Paris

The day you decide to do it is your lucky day.
-Japanese proverbs

"A journey of a thousand miles must begin with a single step." -- Lao Thu

Happiness comes when you focus on seeing the light at the end of every tunnel and being the light for those you love ~ Karen Salmansohn

By being yourself, you put something wonderful in the world that was not there before.

Nothing ever goes away until it teaches us what we need to know ~ Pema Chodron

Lighthouses don't go running all over an island looking for boats to save; they just stand there shining ~ Anne Lamott

The practice of forgiveness is our most important contribution to the healing of the world ~ Marianne Williamson

S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

துபாயில் (சமீர் அலி) படகில் பயணம்

PALM JUMEIRAH Waldrof Astoria Hotel - Dubai.

வாழ்த்துக்கள் to முஹம்மது மக்தூம்