Wednesday 28 November 2018

பிரிந்தவர் சேர்ந்தனர் /படமும் பாசமும் சேர்த்து வைத்தது


எனது உறவுனர் ஹன்னோயில் நம்டினில் சிறந்த வியாபாரம் செய்து வந்தார் .அதனால் அவரை நம்டின் அஜீஸ் என்று அழைப்பார்கள் ஹன்னோய் அமேரிக்கா ஆக்கரமத்திலிருந்து விடுதலையடைத்து கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு வர அவர் அங்கிருந்த தனது சிறு வயது மூன்று மகன்களை அழைத்துக் கொண்டு தாய்நாட்டிற்கு இந்தியாவிற்கு தன் தாய் வீட்டற்கு நீடூருக்கு வந்து விட்டார் .ஆனால் ஹன்னோயில் திருமணம் செய்த வியட்நாம் மனைவி தன் நாட்டை பிரியமனமின்றி தான் வராமல் தான் பெற்றெடுத்த மூன்று மகன்களையும் பிரியமனமின்றி பாசத்துடன் அனுப்பி வைத்தார்
காலங்கள் கடந்தன .

தகப்பனார் இறந்த பின்பு அவரது வளர்ந்த இரண்டு மகன்கள் லாவோசுக்கும் ஒரு மகன் துபாயுக்கும் சென்று சிறப்பாக தன்னை உருவாக்கிக்கொள்ள லாவோசில் உள்ள இரு மகன்களும் அங்கேயே திருமணம் செய்துக்கொண்டு தொழில் நடத்தி வந்தனர் .ஒருவர் அங்கு உணவகம் நடத்தி வருகின்றார் .அந்த உணவகத்திற்கு பல வெளிநாட்டு மக்களும் உணவருந்த வருவார்கள் .அந்த உணவகத்தில் தனது தாயின் படத்தை பலரும் பார்க்கும்படி தாயின்மீதுள்ள பாசத்தால் வைத்துள்ளார் .அந்தப்படத்தை ஹன்னோயிலிருந்து வந்த ஒருவர் பார்த்துள்ளார் .அவர் தன் நாட்டிற்கு ஹன்னோய் சென்றபின் அங்குள்ள தன் தாயிடன் "அம்மா உன் படத்தை லாவோசில் ஒரு உணவகத்தில் மாட்டியிருப்பதை பார்த்தேன் " என்றார்
அந்த தாய் " நீ அங்கு போய் அவர்களை விசாரித்து வா " என்று விருப்பம் தெரிவித்துள்ளார் .
அவர் தன் கணவர் இந்தியா சென்ற பின்பு அவரது அங்குள்ள தங்கள் பெற்றோர்களின் விருப்பத்திற்கு இணங்க அங்கு மறுமணம் செய்துள்ளார் .அங்கு அவருக்கு மறுமணத்தில் பிறந்தவர்தான் இவர் மற்றும் சிலர்
..தாயின் விருப்பப்படி அவர் திரும்பவும் லாவோசுக்கு அந்த உணவகத்திற்கு வந்து அவர்களிடம் விசாரித்ததில் உண்மை அறிந்துள்ளது அவர்களுக்கு .

இந்தியாவுக்கு வந்து லாவோசுக்கு
சென்ற அந்த இருவரும் ஹன்னோய் சென்று தன் தாயை பார்த்து மகிழ்ந்தனர் .அவர்களிடன் நீங்கள் இரண்டு பேர்தானே வந்துள்ளனர் மற்ற ஒரு மகனையும்( *அவர் பெயர் மட்டும் அந்த தாயின் நினைவில் )விசாரித்து அவரை பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளார் .அந்த மகனும் இன்னும் ஒரு மாதத்தில் ஹன்னோய் சென்று பார்க்க இருக்கின்றார் .இது அந்த மகன் நேற்று இதனை சொன்னார்
அனைவர் பெயரும் எனக்கு தெரியும் இருப்பினும் அதனை இங்கு தவிர்த்துள்ளேன்
சுருக்கமான பதிவு

No comments:

Post a Comment