Friday, 22 November 2019

வாழ்வில் மறக்க முடியாத ஹாஜி அன்பு இ.ப.அவர்கள்


வாழ்வில் மறக்க முடியாத அன்பு மாமா இ.ப.
இந்த பெரியவர் .இ.ப. என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பக்கீர் முஹம்மது ராவுத்தர் அவர்கள் எனது தந்தையின் உயிர் தோழராக வாழ்ந்தவர்.
இவரை அன்புடன் மாமா என்றுதான் அழைப்பேன்
எங்கள் வாழ்வில் இவர் ஒரு அங்கம்
இவர்தான் எங்கள் வெங்கலக் கடையை நடத்தி வந்தவர் .கடையின் வளர்ச்சிக்கு இவர் ஆற்றிய பங்கு மிகவும் அதிகம் .அவர்களது வீட்டுக்கே வெங்கலக் கடைக்காரர் வீடு என்று ஊர் மக்கள் அழைப்பர்
எங்கள் தந்தையோடு அனைத்து நாடுகளுக்கும் உடன் சென்றவர்
நான் சிறு வயதில் அவர்களிடன்தான் தினமும் கடையில் பள்ளிக்கூடம் சென்று வந்த பின் அரை அணா காசு பெற்றுக் கொள்வேன்
சிரித்த முகம் .கோபமே வராது . .

குற்றாலம் என்றாலே குதூகலம்தான்


எத்தனை முறை சென்றாலும் அலுப்பதே இல்லை. தமிழ் நாட்டின் சொர்க்கம் அது

குற்றாலம் என்றால் என்னென்ன நினைவுக்கு வரும்?

1. கொட்டும் நீர் இத்தனை குளிராய் இருந்தும் நடு இரவிலும் சென்று குளிக்கும் ஆர்வம் எப்படி வருகிறது?

2. இந்தக் குரங்குகளுக்கும் அருவிக்கும் என்ன பந்தம்? எங்கெல்லாம் அருவிகள் உண்டோ அங்கெல்லாம் ஏராளமான குரங்குகளைக் காணலாம். கையில் இருப்பதை வந்து தட்டிப் பறித்துப் போகும் தைரியத்தை வளர்த்துக்கொண்டவை நம்மூர் குர்ங்குகள்

3. அலுவலகம், வீட்டுத் தொல்லை எல்லாம் விட்டு ஹாயாக சில நாட்கள் இப்படி ஓர் நிம்மதியைத் தரும் குற்றாலத்தை எப்படித்தான் பாராட்டுவது?

Monday, 18 November 2019

அன்புடன் வாழ்த்துக்கள் திரு நண்பர் செல்வத்திற்கு

சின்ன, சின்ன விபத்து பெரிய ஆபத்து வராமல் பாதுகாத்துக் கொள்ளும்

விளையாட்டு உடல்நலத்திற்கும் அறிவின் வளர்ச்சிக்கும் உதவி செய்கின்றது. விளயாடும்போது சில காயங்கள் ஏற்படுவது இயல்பு. பயம் காட்டியே வளர்ந்த குழந்தை தன் வாழ்நாளின் பெரும் பகுதி பயத்திலேயே வாழ்நாளை ஓட்டும் நிலை ஏற்பட்டுவிடுகின்றது. சின்ன, சின்ன விபத்து ஏற்படும்போது இயல்பாகவே அது தனக்கு பெரிய ஆபத்து வராமல் பாதுகாத்துக் கொள்ளும் மற்றும் தனது திறமையையும் வளர்த்துக் கொள்கின்றது. விடுங்கள்.. அது இயற்கையின் அருமையினை அறிந்து தன அறிவினை வளர்த்துக் கொள்ளட்டும். பாதுகாப்பு வளையம் போடாமல் நீங்கள் பாதுகாவலனாக இருங்கள்
எதில் என்ன இறைவன் மறைத்து வைத்துள்ளானோ! முயன்றால் பயன்தர இறைவனது அருளும் கிட்டும். இயற்கையை கண்டு ரசிப்பதோடு இல்லாமல் அதனை நம் வயப்படுத்திக்கொள்வதே இறைவனது நாட்டமும். இயற்கை நம்முடன் விளையாடும்பொழுது நாமும் அதனுடன் விளையாடி மகிழ்வோம்.

Sunday, 10 November 2019

வயதென்னவென்று கேட்டு வெட்கப் பட வைக்கிறார்கள்

வயதென்னவென்று கேட்டு வெட்கப் பட வைக்கிறார்கள்
வயதை வைத்து மரியாதை கிடைக்கப் போவதுமில்லை
வயதைப் பார்த்து மட்டும் பார்த்து பெண் கொடுக்கப் போவதுமில்லை
வயது வந்தமையால் உயர்த்திவிடப் போவதுமில்லை
வயது வந்தவனுக்கு இந்த வேலையெல்லாம் தேவையா என்பார்கள்
கிழடான கவிஞன் கன்னிகளை கவிதையாக வர்ணித்தால் விரும்பிப் படிப்பார்கள்
வயதானவனும் இளமையானவனும்

கவிதை புனைவது கவிஞருக்கு விருப்பம்
கவிதை படிப்பது மாணவருக்கு அவசியம்
கவிதையின் பொருள் அறிவது பலருக்கு சிரமம்
கவிதை படத்தில் பாட்டாக வர பலரும் புரிகின்றனர்