வயதென்னவென்று கேட்டு வெட்கப் பட வைக்கிறார்கள்
வயதை வைத்து மரியாதை கிடைக்கப் போவதுமில்லை
வயதைப் பார்த்து மட்டும் பார்த்து பெண் கொடுக்கப் போவதுமில்லை
வயது வந்தமையால் உயர்த்திவிடப் போவதுமில்லை
வயது வந்தவனுக்கு இந்த வேலையெல்லாம் தேவையா என்பார்கள்
கிழடான கவிஞன் கன்னிகளை கவிதையாக வர்ணித்தால் விரும்பிப் படிப்பார்கள்
வயதானவனும் இளமையானவனும்
கவிதை புனைவது கவிஞருக்கு விருப்பம்
கவிதை படிப்பது மாணவருக்கு அவசியம்
கவிதையின் பொருள் அறிவது பலருக்கு சிரமம்
கவிதை படத்தில் பாட்டாக வர பலரும் புரிகின்றனர்
கவிதை பணத்துக்காக புனையப் படுகின்றது
கவிதை மனதின் ஆழத்தை அறிய வைக்கின்றது
கவிதை எழுதுவது கவிஞரின் கலை
கவிதை இசையாக மனதை தொடுகின்றது
கவிஞன் காதலியை தேடுவதில்லை
கவிஞனை காதலிப்போர் நிறைந்திருப்பர்
கவிஞன் கற்பனைக்கு உரிமையானவன்
கலைஞன் கற்றதை வெளிப்படுத்துபவன்
கவிஞன் காணாததை கவிதையில் சொல்வான்
கவிஞன் கண்டதையும் கவிதையில் சொல்வான்
கவிஞன் காணாததையும் கண்டதையும் நயமாக சொல்வான்
கவிஞன் கற்பனை வெள்ளத்தில் நீந்துவான்
கவிஞனின் பெயரில் ஒளிவு மறைவு இருக்கும்
கவிஞனின் கவிதை கருத்திலும் உண்மை மறைந்திருக்கும்
கவிஞனின் கவிதை பொய்யால் புனைக்கப் பட்டதல்ல
கவிஞனின் கவிதை மெய்யால் மிகைப் படுத்தப் பட்டிருக்கும்
கவிஞன் வார்த்தையால் விளையாடுவான்
கவிஞன் வாய்மையால் கலைஞனாவான்
கவிஞன் வாழ்த்துவதில் கவிதையாய் தந்து மகிழ்வான்
கவிஞன் வாழ்தப்படுவதில் கவிஞனின் கவிதைகள் மணம் வீசும்
No comments:
Post a Comment