எனது அண்ணன் சென்னையில் Dr .வைத்தியநாதன்.M .D அவர்களிடம் தனக்காக வைத்தியம் பார்த்து வந்தார் ,அவருடன் நானும் உடன் அவருக்காக போய் வருவதுண்டு .அப்பொழுது எனது அண்ணன் விருப்பத்திற்காக நானும் வைத்தியம் பார்த்துக் கொள்வேன்.அப்பொழுது நான் P.U.C படித்து முடித்து லயோலா கல்லூரியில் இளங்கலை வகுப்பில் சேர்ந்திருந்தேன் .இதற்கிடையில் மருத்துவம் படிக்க முயன்றேன்.அப்பொழுது கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் G.C.I.M படிப்பு நடந்தது . நான் அதில் படிக்க Dr .வைத்தியநாதன் M .D அவர்களிடம் G.C.I.M படிக்க சிபாரிசுக்கு உதவி நாடினேன் .அவர் மருத்துவப் படிப்பு உனக்கு சரிவராது என்றார்.
அது படிக்கும்போதெல்லாம் அந்த வியாதி உனக்கு இருப்பதாக நினைத்துக் கொள்வாய் என்றார்.இருப்பினும் நான் அப்படிப்புக்கு முயன்றேன்.. அது எனக்கு கிடைக்க அதிகப்படியான வாய்ப்பு இருக்க எனது நீடூர் நண்பர் G.C.I.M படிப்புக்கு மதிப்பு கிடையாது என்று சொல்லி என் மனதை மாற்றி விட்டார் . அந்த வருடம் என்னுடன் படித்த நண்பர்கள் சிலர் அதில் சேர்ந்து விட்டனர் .ஆனால் பாருங்கள் அந்த வருடமே G.C.I.M படிப்பை M.B.B.S மாற்றி விட்டனர் .
பின்பு எனது Dr .கருணாதி மருத்துவ நண்பரிடம் Dr .வைத்தியநாதன்.M .D "படிக்கும்போதெல்லாம் அந்த வியாதி உனக்கு இருப்பதாக நினைத்துக் கொள்வாய்" என்று சொன்னதைச் சொன்னேன் .அதற்கு Dr .கருணாதி உனக்கு தவறான அறிவுரையை Dr .வைத்தியநாதன்.M .D சொல்லியுள்ளார் .இந்த எண்ணம் மூன்றாம் ஆண்டு மருத்துவப் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் அதற்கு 'Third Year Syndrome,'
'நீ செய்தது மிகவும் தவறு. தவறான அறிவுரை கொடுக்கப்பட்டு நீ வழிகெடுக்கப் பட்டிருக்கிறாய்' என்று சொன்னதோடு ஒரு விளக்கம் கொடுத்தார்.
மூன்றாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் போது பெரும்பால மருத்துவ மாணவர்களுக்கும் படிக்கும் பாடத்தில் காணப்படும் வியாதியை பற்றிய விளக்கங்கள் தனக்கே அந்த வியாதி இருப்பதாக நினைப்பார்கள் .அதற்கு பெயர் third year syndrome
Medical students' disease (also known as second year syndrome or intern's syndrome) is a condition frequently reported in medical students, who perceive themselves to be experiencing the symptoms of a disease that they are studying
The condition is associated with the fear of contracting the disease in question.
No comments:
Post a Comment