Tuesday, 30 November 2021

இறைவா. எல்லாம் உன் நாட்டப்படியே நடக்கும்

 

 

                                              அப்துல் ஹக்கீம்

உமது புகழ் காலமெல்லாம் தொடரும்

 

உமது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

 

நீங்கள் செய்த சேவைகள் ,மக்கள் தரும்

 

வாழ்த்துகள்

 

உமது நன்மைகளாக உம்மை

 

உமது இறப்புக்கும் பின்னும் தொடரும் .

 

அடுத்த இனத்தவரை தன் உடன்பிறவாத சகோதரராக/சகோதரியாக ஏற்றுக்கொள்ளும் மனம் உம்மோடு இருந்தது

 

வரலாறு படைத்த மனிதரில் ஒருவராக நீங்கள் இருப்பீர்கள்

 

நற்செயல்களுக்கு போராடும் குணம் உங்களோடு இருந்தது

 

உம்மை பலர் ஜென்டில்மேன் என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பதனை நான் அறிகின்றேன்.

 

எவர் மனதையும் பாதிக்காமல் பேசும் உம் குணமும் செயலும் உயர்வானது .

 

நீர் எங்களை விட்டு இறைவனிடம் சென்று இன்றோடு ஏழு நாட்கள் ஆகி விட்டதாக சொல்கின்றார்கள் .எனக்கென்னவோ நேற்று நடந்ததுபோல் தோன்றுகின்றது .உன்னை உடன்பிறந்த சகோதரராக என்னை இறைவன் படைத்தது எனக்கு கிடைத்த இறைவனது அருள்தான் . நீங்கள் சேர்ந்து விட்டீர்கள் நாங்களும் உங்களிடத்திற்க்கு வருவோம் உங்களுக்காக நாங்கள் இறைவனிடம் வேண்டுகின்றோம் .நீங்களும் எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.சிறுவயது முதல் என்னை அன்புடன் வளர்த்தது நெஞ்சில் பதிந்துவிட்டன .

 

உம்மை இறைவன் உலகில் தோற்று வைத்தான்

 

உம்மை தோற்று வைத்தவன்

 

உம்மை தன் வசமாக்கிக் கொண்டான்

 

என்னை சில காலங்கள்

 

இவ்வுலகில் உலவ விட்டு

 

என்னையும் உம்மைப்போல்

 

தன வசமாக்கிக் கொண்டு

 

உம்மிடத்தில் சேர்த்து வைப்பான்

 

உம்மை இறைவன் முதலில் தன் வமாக்கிக் கொண்டது

 

என்னை உனக்காக இறைவனிடம் வேண்டத்தான்

 

.

 

ஒருவரைப்போல ஒருவருமில்லை

 

உங்களைப்போல் யாருமில்லை

 

உங்களது முடிவெடுக்கும் ஆற்றல்

 

முடிவை செயல்படுத்தும் திறமை

 

நினைவில் நிற்கும்

 

உமது பிரிவால் வாடும் அனைத்து மக்களுக்கும் இந்த பிரிவை தாங்கும் இதயத்தை இறைவன் தந்தருவானாக

 

இறைவா. எல்லாம் உன் நாட்டப்படியே நடக்கும்

 

இவருக்கு இவர் மக்களுக்கு ஆற்றிய சேவைகளின் உயர்வினைக் கொண்டு

 

இவருக்கு நன்மைகளை சேர்த்து விடு

 

இறந்து விட்டால் நம்மைபற்றி நல்ல வார்த்தைகள் மக்கள் சொன்னால். நமக்காக இறைவனிடத்தில் வேண்டினால் அதுவே இந்த உலகில் நாம் பெற்றதில் உயர்வானது

 

.முகம்மது அலி ஜின்னா



 

No comments:

Post a Comment