அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் அல்ஹாஜ் முஹம்மது இஸ்மாயில் பாகவி ஹஜ்ரத் அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில்
சிறந்த எழுத்தாளர் .,பண்பாளர் ,மனிதநேயம் கொண்டவர் ,அனைவரின் மீதும் பாசம் காட்டி மற்றவர்களை அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்
இவரை வாழ்த்தி மகிழ்வதில் நாம் மகிழ்வடைகின்றோம் .
இறைவன் அருளால் தொடரட்டும் இவரது சேவைகள் .
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்
மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காத வாழ்க்கை உயர்ந்த வாழ்க்கை
கடனில்லாத வாழ்க்கை உயர்ந்த வாழ்க்கை
கடுமையான உழைப்பும் நல்ல எண்ணமும் வாழ்க்கையில் முன்னேற்றம் தரும்.
உற்சாகப் படுத்துபவர்.சிறந்த வழிகாட்டி
ஹஜ்ரத் அவர்கள் பிறந்த ஊர் புத்தானந்தம்
அவர்கள் நீடூர் நெய்வாசலில் அரபிக் கல்லூரி நாஜிராக சேவை செய்வதுடன் நீடூர் நெய்வாசல் பெரிய பள்ளியில் தலைமை இமாமாக இருப்பதுடன் நீடூர் நெய்வாசலில் ஊர் ஜாமத்திலும் சேர்ந்து இங்கு சிறப்பாக புகழுடன் வாழ்ந்து வருகின்றார்கள் .பலமுறை ஹஜ் செய்ததுடன் பல வெளி நாடுகளுக்கும் சேவை நிமித்தகமாக சென்று வந்துள்ளார்கள்
அவர்களைப் பற்றி நிறைய எழுதலாம்
.jpg)

.jpg)

.jpg)


No comments:
Post a Comment