Showing posts with label ஆளுமை. Show all posts
Showing posts with label ஆளுமை. Show all posts

Friday, 27 September 2013

நீ ஏன் என்னை உற்றுப் பார்க்கிறாய் !


நீ என்னை பார்க்கிறாய்
நீ ஏன் என்னை உற்றுப் பார்க்கிறாய்
நீ என்னை பார்த்ததோடு உன் பார்வையை திருப்பிக் கொள்
நீ என்னை பார்பதற்கு நான் உன்னுடையவள் அல்ல

நான் உன் பார்வையில் படாமல் இருக்க விரும்புகின்றேன்
நான் உன் பார்வையில் படாமல் இருக்கவே மேலங்கி அணிந்திருக்கிறேன்
நான் அணிந்திருக்கும் மேலங்கி என் கற்புக்கு பாதுகாப்பு
நான் அணிந்திருக்கும் மேலங்கி உன்னை தவறு செய்யாமல் தடுக்கும்

நான் என் இறைவனால் படைக்கப்பட்ட இறை நேசம் கொண்டவள்
நான் என் இறைவனால் படைக்கப்பட்ட பொருளல்ல
நான் என் கொள்கையில் சமரசம் செய்துக் கொள்ள விரும்பவில்லை
நான் என் கொள்கையில் பிடிப்போடு இருக்கிறேன் அது இறைவனின் ஆணையாக இருப்பதால்

என் சுதந்திரம் என் ஆளுமையில் உள்ளது
என் சுதந்திரம் என் ஆடையில் அடங்கி விடவில்லை
என் சுதந்திரம் என் உடலைக் காட்டி உன்னை வீழ்த்துவதற்கு அல்ல
என் சுதந்திரம் என் இறைவன் காட்டிய வழியில் வாழ்வதில் உள்ளது