Showing posts with label இறையில்லம். Show all posts
Showing posts with label இறையில்லம். Show all posts

Monday, 27 January 2014

இறைவனின் மகிமையால் மனதில் நிம்மதி நிறைந்து விடட்டும்

சில முல்லாக்களின் முரண்பாடுகள் முட்டிக் கொள்கின்றன
சிலர் கல்லாக் கட்டி காசுகளை கணக்கு பார்க்கின்றனர்

அப்பாவி மக்கள் அலைபாய்கின்றனர்
எப்பக்கம் உண்மை உறைந்துள்ளது
என்பதை அறியாது தடுமாறுகின்றனர்

Thursday, 10 October 2013

கேட்க வேண்டிய இடத்தில் கேட்டு விடுவோம்!

இறை இல்லம் செல்ல ஆசை இறைவனைத் தொழ
இறைவனுக்காக முதன் முதலில் கட்டிய ஆலயம் கஃபா
இறை முதன் ஆலயம் கஃபாவை நபி ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட
இறை முதன் ஆலயம் கஃபாவை நபி இப்ராஹீம் (அலை) அவர்களால் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட
இறை இல்லத்திற்கு கஃபா (முதல் இறையில்லம்) போவது முடிந்தோர் கடமை

உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டை உணர்த்துமிடம் கஃபா
உலக முஸ்லிம்கள் ஒன்று கூடுமிடம் கஃபா
உலக மக்களின் உயர்வு தாழ்வுகளை நொறுக்குமிடம் கஃபா
உலக மக்களின் நிற வேற்றுமைகளை நசுக்குமிடம் கஃபா

நாவசையட்டும், ஈரம் மனதில் சுரக்கட்டும்
கேட்க வேண்டிய இடத்தில் கேட்டு விடுவோம்
நினைத்ததை நினைவில் நிறுத்தி இறைவனை கேட்டு விடுவோம்
நெஞ்சுருகி அருளாளனும் அன்புடையோடும் கருணையுடையோனுமாகிய அல்ல்லாஹ்விடம் கேட்டு விடுவோம்