Showing posts with label சக்தி. Show all posts
Showing posts with label சக்தி. Show all posts

Tuesday, 10 September 2013

நான் விழுவேன் விழுந்த வேகத்தில் எழுவேன்!

கொள்கை உண்டு பிடிப்பு இல்லை
பிடிப்பு உண்டு கொள்கை இல்லை

நாளுக்கு ஒருகட்சி
ஆளுக்கு ஒரு கட்சி
இன்று இந்த கட்சி
நாளை அந்த கட்சி
நேற்று போற்றப் பட்டவர்
இன்று தூற்றப் படுகிறார்

வந்தாரை வரவேற்கும் கட்சி
போவாரை தூற்றும் கட்சி

எத்தனை கட்சி இருந்தாலும் நான் ஒரு சுதந்திரப் பறவை
சுதந்திரமாக நின்று உன் வாக்கு சீட்டைப் பிரிப்பேன்
சுதந்திரமாக இருபதற்கும் சன்மானம் உண்டு
மானம் போனால் என்ன! பணமும் பதவியும் வந்தால் மாலைகள் வர மானம் வரும் .