Showing posts with label படைப்புகள். Show all posts
Showing posts with label படைப்புகள். Show all posts

Thursday, 12 September 2013

வைர வரிகள் வைரத்தின் ஒளிபோல் மின்னி பிரகாசிக்கிறது

அழகான மக்கள் தங்கள் முத்திரையை நம் மனதில் பதித்து விட்டார்கள்

சூரிய ஒளியில் பூக்கும் பூக்கள் தனது அழகை நம் கண்களுக்கு விருந்தளிப்பதுபோல்

தேன் போன்ற இறைவனின் அருள் அவர்கள் எழுத்தில்  பிரகாசிக்கின்றது

அவர்கள் விட்டுச் சென்ற துல்லியமான படைப்புகள் நம் இதயத்தில் பதிந்துவிடுகின்றது

அவர்கள் விட்டுச் சென்ற வைர வரிகள் வைரத்தின் ஒளிபோல் மின்னி பிரகாசிக்கிறது

பேசுவது பேச்சோடு முடிந்து விடுகின்றது

எழுதி வைத்த உயர்ந்த கருத்துகள் காலத்தை வென்று நிற்கின்றது

கவிதையாக தந்த சிறப்பான தத்துவங்கள் மனதில் பதிந்து விடுகின்றது

எழுதி வைத்த உயர்ந்த சிந்தனைகள் பாட நூலாக வந்து விடுகின்றது

எழுத்தில் இருக்கும் படைப்புகள் மக்களுக்கு வழி காட்டியாகிவிடுகின்றது

எழுத முடிந்தவர்கள் எழுதி விடுங்கள்

இறைவன் தந்த சிறப்பான எழுதும் ஆற்றலை முடக்கி விடாதீர்கள்

எழுதும் ஆற்றல் உங்களுக்கு கொடுக்கப் பட்டது பொதுயுடைமையானது