Wednesday 3 December 2014

அவர்கள் செய்த தவறை அவர்கள் அறியவில்லை

 
பாட்டு பாடு நண்பனே!
பாடுவது நல்ல பாட்டாய் பாடு
பாடுவது என்னைப் பற்றி பாடு
பாடுவதை என்னைப் புகழ்ந்து பாடு
பாடுவது புகழ்ச்சியாய் இருக்க
பாட்டினால் மாற்றம் பெற்று உயர்வடைய பாடு
பாடுவதை ஒரு பாடாக நினைத்து பாடாதே
பாடியவர்கள எல்லாம் என்னை ஏசியே பாடிச் சென்றனர்

வாழ்வெல்லாம் வசை மொழிகள்
நல்லவனாக்க நல்ல வார்த்தைகள் சொல்லவில்லை
வசைமொழிகள் மனதை தைத்தது
வசைமொழிகள் நல்லதை நாடவில்லை
வசைமொழிகள் வீம்பாக செயலை நாடியது

குடும்பத்தில் உள்ளவரே குறை கூறி ஊரெல்லாம் பரப்பினர்
தன் மகனே ஆனாலும் தனியே அறிவுரை தரவேண்டுமென்ற
உயர் நோக்கு அறியாமல் போயினர்
அன்பு இருக்குமிடத்தில் அறிவு மங்கிப் போனது

நொந்து போய் நலிவுற்றவனாய் நடுத்தெருவில் நிற்கிறேன்
நண்பனாய் மனதைத் தடவி அமைதியடைய நாலு வார்த்தைப் பாடு
நல்லது கெட்டது அறிய வைத்து அன்பால் மனதை வருடிப் பாடு
உன் பாட்டு கேட்க உயர்ந்து வர ஊரெல்லாம் புகழச் செய்வர்
குடும்பத்தார் கூடி நின்று கும்மி அடித்து மகிந்து வீட்டிற்கு அழைப்பர்

நான் செய்த தவறை நான் அறிந்தேன்
அவர்கள் செய்த தவறை அவர்கள் அறியவில்லை

No comments:

Post a Comment