Sunday, 20 May 2018

தொழுகை


 தொழுகையின் அருமையினையும் அதனால் அடையக் கூடிய நற்பயன்களயும்   மக்களிடம் எடுத்துச் சொல்பது சிறப்பாக இருக்கும் .

  மனதை வருடி விடுங்கள். இக்கால மக்கள்   (சிலர்) மனதில்  அனைத்து வகை இன்ப துன்பங்களைக் கண்டு அலுத்துப் போய் சுவனத்தின் மாண்பினையும் நரகத்தின் வேதனைப் பற்றியும் சிந்திக்க மனமில்லாதவர்களாய் மாறிவருகின்றனர்.
தொழுகையின் சிறப்பினைப்  பற்றி சொல்ல  எதனையோ ஹதீஸ்களும் குரான் ஆயத்துகளும் இருக்கிறது. குடிகாரனை வெறுக்காதீர்கள் குடிப்பதை தடுக்க வழி சொல்லுங்கள் . குடிப்பவனும் தொழுகையை நாடிவிட்டால் குடிப் பழக்கம் அவனை விட்டு ஓடிவிடும் .அவரையும் அன்போடு தொழ அழைத்துச் செல்லுங்கள். இக்கால குழந்தைகளுக்கு அடித்து பாடம் சொல்லித் தருவதில்லை மாறாக கல்வி மேல் ஆர்வம் உண்டாக்கி பயிற்சி கொடுத்து வளர்கின்றார்கள்.
ஆர்வம் உண்டாக்கி தொழுகையின் அருமையினை விளங்க வையுங்கள்.

Saturday, 19 May 2018

Dua After Azan பாங்கு துஆ:

பாங்கு துஆ: –

‘அல்லாஹூம்ம ரப்பஹாதித் தஃவதித் தாம்மத்தி வஸ்ஸலாதில் காயிமத்தி ஆத்தி முஹம்மதினில் வஸீலத்த வல்ஃபளிலத்த வப்அஃத்ஹூ மகாமன் மஹ்மூதினில்லதி வத்ததஹ்”” என்று பிராத்தனை செய்தால் அவருக்கு மறுமையில் எனது பரிந்துரை (கடமையாகிவிட்டது) கிடைக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் – ஜாபிர் (ரலி) புகாரி

பொருள்: பரிபூரணமான இப்பிரார்த்தனைக்கும், நிரந்தரமான தொழுகைக்கும் உரிய இரட்சகனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு சுவர்க்கத்தில் உள்ள வஸீலா எனும் உயர்வான அந்தஸ்த்தையும் சிறப்பையும் வழங்குவாயாக!

“வஸீலா என்பது சுவர்க்கத்திலுள்ள ஒரு உயர்வான நிலையாகும். அது அல்லாஹ்வின் அடியார்களில் எவராவது ஒருவருக்குத் தான் கிடைக்கும். அது எனக்காக இருக்க வேண்டும் என நான் ஆதரவும், நம்பிக்கையும் வைக்கிறேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் – ஆதாரம்: முஸ்லிம்

Thursday, 17 May 2018

கையூட்டை கலைவது கைக்கூடுமா!

 மனைவி கணவனை கடையில் சென்று பெரிய வெங்காயம் வாங்கிவரச் சொல்லி ஆணையிடுகின்றாள் ( இப்பொழுதெல்லாம வேண்டுவதில்லை) கணவன் கண்களில் நீர் சுரக்கின்ன்றது. 'வெங்காயம் உரிக்கும்போது எனககுத்தான் கண்களில் நீர் வழியும்  நீங்கள் ஏன் கடைக்கு போகச் சொன்னால்  அழுது மாய்கின்றீர்கள். பின் நான் எப்படி உங்களுக்கு வெங்காய சட்டினி வைப்பது '  என கனத்த குரல் கொடுக்க கணவன் அதற்கு ' வெங்காயம் விலையை நினைத்தாலே பயத்தில் கண்களில் நீர் வழிகின்றது'   என தன்னிலை விளக்கம் தருகிறார். இதுதான் இன்றைய விலை ஏற்றத்தின் நிலை இந்த நிலை வருவதற்கு  கையூட்டு முறை ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

Thursday, 10 May 2018

தோகையை விரிக்கும்போது மயில் கவரும் வகையில் காட்சி

தினமும் இரவும் பகலும் வருவதும் அகவுவதும் நிகழ்வது. இருப்பினும் படம் எடுக்க முயல பறந்து விடும். இன்று பகல் வீட்டு பின் பக்கம்  ... தோகையை விரிக்கும்போது மயில் கவரும் வகையில் காட்சி படப்பிடிப்பில் சிறப்பு பெற்று நிறைவைத் தந்ததில் மகிழ்வு.

Wednesday, 9 May 2018

தோல்வியையும் வெற்றிகரமாக மாற்ற முடியும்


தோல்வியையும் வெற்றிகரமாக  மாற்ற முடியும்.
ஒரு கட்டத்தில்  தோல்வியின் உணர்ச்சிகளை நாம் சமாளிக்க வேண்டி இருக்கின்றது 
தோல்வி வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது
சில நேரங்களில் தோல்வி அடைந்தது கூட தெரியாது,
ஆனால் தோல்வி அடைந்த பிறகு  சுயநலத்தையும் அவமானத்தையும் அது தருகிறது, ஏனெனில் அவமானத்தை எப்படி சமாளிப்பது என்பது   தெரியாததினால்.
அது பின்பு இயற்கையாக  உந்துதல் சக்தியை தருகின்றது


சிந்தனையை மாற்றியமைத்து, நம்முடைய தோல்விகளை  வெற்றிகரமாக்க முடியும் 


Monday, 7 May 2018

உதிர்ந்த இறகும் உயர்வடையும்

உதிர்ந்த இறகும் உயர்வடையும்



பறக்கும் பறவைக்கு
இறக்கை பறக்க உதவுகிறது
பறவை அலகால் இறக்கையை
அலசி பறந்து போகையில்
தனி இறகாய் ஓர் இறகு
தரையில் விழுந்தது

பறவை பறப்பதற்கு விழுந்த இறகு தேவையில்லை
விழுந்த இறகு விரும்பினாலும்
பறவையின் இறக்கையோடு இணைய வாய்ப்பில்லை

விழுந்த இறகு மண்ணில்
செரித்து மறித்துப் போகவில்லை

Sunday, 6 May 2018

நீட் தேர்வு மையத்தில்

நீட் தேர்வு மையத்தில்
சோதனைகள்
பெண்பிள்ளைகள் காட்சிகள்
வேதனை
இனி றோபோக்கள்தான் தேர்வு எழுத வேண்டும்

நீட் தேர்வு நடத்துறாங்க
சோதனை செய்றாங்க
பெண் பிள்ளைகள் படும் அவலங்கள்
இப்படி ஒரு கேவலமான தேர்வு எழுதுவதற்கு முன்பே சோதனைகள்
உலகம் காணாத கண்டுபிடிப்பு
பெண்கள் முன்னேற்றத்தை தடுக்கும்
பெண் பிள்ளைகள் மருத்துவராக வருவதற்கு முன்பே
வெட்கத்தை அழித்தொழிக்கும் முயற்சி
வெட்கக்கேடு