Monday 7 May 2018

உதிர்ந்த இறகும் உயர்வடையும்

உதிர்ந்த இறகும் உயர்வடையும்



பறக்கும் பறவைக்கு
இறக்கை பறக்க உதவுகிறது
பறவை அலகால் இறக்கையை
அலசி பறந்து போகையில்
தனி இறகாய் ஓர் இறகு
தரையில் விழுந்தது

பறவை பறப்பதற்கு விழுந்த இறகு தேவையில்லை
விழுந்த இறகு விரும்பினாலும்
பறவையின் இறக்கையோடு இணைய வாய்ப்பில்லை

விழுந்த இறகு மண்ணில்
செரித்து மறித்துப் போகவில்லை


எழுதுவோர் மையைத் தொட்டு
எழதுகோலாய் ஆக்கினர் இறகை

படம் வரைவோர் நிறக் கலவையில் தோய்த்து
படம் வரைந்து படம் வரைய தூரிகையாய் பயன் படுத்தினர்

விளயாடுவருக்கு பந்தாக பயனாகி
பந்தை பறக்கச் செய்தது

தலையில் கிரீடம் அணிந்து
அழகாய் அதன் மீது நிறுத்தி
இறகை அழகு படுத்தி
இறக்கையை அழகு படுத்தினர்

ஒன்றிலிருந்து உதிர்ந்து
மற்றொன்றில் உயர்வு பெற்றது

ஒருவருக்கு ஒன்று பலனிக்காமல் போக
பலருக்கு அது பல வகையில் பயன்பெற்றது

No comments:

Post a Comment