Thursday 11 March 2021

சேவை இறைவனது அருள்பெற இருக்க வேண்டும்

 

சென்றமுறை சிறப்பாக சேவை செய்தார் என்பதனை மறைக்கவோ மறுக்கவோ முடியாது

இம்முறை அதற்கு தான் விரும்பியபடி தனக்கு இடம் கிடைக்கவில்லை என்பதால்

தவறான பாதையை கைக் கொண்டால் அவர் செய்த சேவைகள் அனைத்தும் பயனற்று போகும்

மக்கள் அவரை கொள்கையட்றவர் சுயநலவாதி என்று வெறுக்க ஆரம்பித்து விடுவார்

காலம்வருவரை காத்திருந்து செயல்படலாம் .சேவை இறைவனது அருள்பெற இருக்க வேண்டும்

சேவை செய்ய ஆட்சியில் இருந்துதான் செய்ய வேண்டுமென்பது ஏற்க முடியாது

இக்கால நிலையில் ஆட்சிக்கு வர விரும்புவரின் மனம் புகழுக்கும் பணத்திற்கும் விருப்பமுடையவர்களாகவே தோன்றுகின்றது

அன்சாரிகள் விருந்தாளிகளை நேசிப்பவர்கள் .கொள்கைக்கு முக்கியத்துவம் தந்தவர்கள் .கொள்கைப்பிடிப்புடன் தாங்கள் விரும்பிய உயர் தலைவருக்கு தங்கள் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தவர்கள்

அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ, ஒரு கணவாயிலோ நடந்து சென்றால், அன்சாரிகள் நடந்து செல்லும் பள்ளத்தாக்கில் தான் நானும் நடந்து செல்வேன். ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால், நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: புகாரி)

‘‘மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நித்தியமான) வாழ்க்கை இல்லை; அன்சாரிகளையும், முஹாஜிர்களையும் அந்த நிரந்தர மறுமை வாழ்விற்காக செம்மைப்படுத்துவாயாகஎன்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும். என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ் தான் எங்களுக்கு (‘அன்சார்என்று திருக்குர்ஆன் 9:100-ம் வசனத்தில்) பெயர் சூட்டினான். (பஸராவில்) நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம் (வந்து) சென்று கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் அன்சாரிகளின் சிறப்புகளையும் அவர்களின் (தியாக) நிகழ்ச்சிகளையும் எங்களுக்கு எடுத்துரைப்பார்கள். என்னை அல்லதுஅஸ்த்குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை  நோக்கி, ‘உன் குலத்தார் இன்னின்ன நாளில் இன்னின்னவாறு செய்தார்கள்என்று சொல்வார்கள்.

No comments:

Post a Comment