Wednesday 8 February 2023

என்னை வழிதவற விடாதே, இதுவே எனது கடைசி ஆசை

 அல்லாஹ் உன்னால் எளிதாக எதையும் செய்ய முடியும் என்பது எனக்குத் தெரியும்

அல்லாஹ் உன்னால் மட்டுமே நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும்
அல்லாஹ், உனது சுவனத்திற்கு என்னை வழி நடத்து
அல்லாஹ்,என்னை வழி தவற விட்டு விடாதே,


சில நேரங்களில் நான் தவறு செய்து விட்டேன் என்பதை நான் அறிகின்றேன்
அதனை நினைத்து மனம் உருகி உன் மன்னிப்பை நாடுகின்றேன்
இனியும் தவறு செய்து விடாமல் உனது பாதுகாப்பை நாடுகின்றேன்
எனது இறுதி மூச்சு எப்பொழுது என்பதை நான் அறியேன்
என்னை மன்னித்து எப்பொழுது வேண்டுமென்றாலும்
என்னை உன்னுடன் அழைத்துக் கொள்ளும்போது
என்னை பாவமற்றவனாக அழைத்துக் கொள்ளவும்
அல்லாஹ் நான் உங்களுக்கு போதுமான நன்றி சொல்ல முடியாத நிலையில் இருந்து விட்டேன்
என்னை வழிதவற விடாதே, இதுவே எனது கடைசி ஆசை


ஏனென்றால் எனக்கு நீ தேவை
உனது சுவனத்திற்கு என்னை வழி நடத்த

நாளுக்கு நாள் நிமிடம்போல் கழிகிறது
மேலும் எனது நேரம் நெருங்கி இருக்கலாம் என்று நினைக்கிறேன்
எனவே நான் பிரார்த்தனை செய்கிறேன்:
இறைவா அனைத்து உலகமும் உன்னிடத்தில் உள்ளது
இறைவா எல்லா வழிகளிலும் என்னை நீ விரும்பிய வழியில் வழிநடத்து

என்னை வழிதவற விட்டு விடாதே

No comments:

Post a Comment