Showing posts with label எல்லாம். Show all posts
Showing posts with label எல்லாம். Show all posts

Saturday, 1 February 2014

எல்லாமே என்னிடம் இருந்திருந்தால்! என்னிலை என்னால் அறிந்திருக்க மாட்டேன் .

எல்லாம் என்னிடம் இல்லை
இல்லாததை பெற ஆசையை கொடுத்தாய்

அனைத்தும் அறியாததால்
அறிவை கற்கும் தேடலை தந்தாய்

சிரமத்தை தந்தாய்
சிரமத்தை நீக்கும் வழியை காட்டினாய்

அளவோடு கொடுத்தாய்
தேவையானதை தேடச் சொன்னாய்

வட்டத்தின் வரம்புகளில் நிற்க வைத்தாய்
முன்னேற்றத்தின் வாய்ப்புகளை உருவாக்க வைத்தாய்

களைத்து ஓயச் செய்தாய்
களைப்பை நீக்கும் வலிமையை தந்தாய்

எல்லாமே என்னிடம் இருந்திருந்தால்
என்னிலை என்னால் அறிந்திருக்க மாட்டேன்

என்னிடம் எல்லாம் இருந்திருந்தால்
உன்னருள் நாடி நின்றிருக்க நினைத்திருக்க மறந்திருப்பேன்

தேவையானது அனைத்தும் இருந்திருந்தால்
முறையான நன்றியை முழுமையாக செய்திருக்காமல் இருந்திருப்பேன்

குறைவானதை தந்து
முறையாக தேட வைத்து
நிறைவாகப் பெற்று
குறைவற்ற நன்றியை
மனமுவப்ப தரச் செய்தாய்
--------------------------------------------