மனதில் விரிசல்
உள்ளத்தில் நடுக்கம்
நினைப்பில் தடுமாற்றம்
புரிதலற்ற போக்கு
அறிதளற்ற நிலை
சிக்கலில் சிக்கும் குழப்பம்
வடிகால் அற்ற தேக்கம்
தவறான பாதையில் தவறிப் போதல்
அனாதையாய் விடுபட்ட நிலை
வார்த்தைகள் மற்றும் நம்பிக்கை துரோகம்,
நொறுங்கிய மனமாய் மாய்த்துக் கொள்ளும் நிலை
பாராமுகமாய் படைத்தவனை அறியாமல் இருந்த நிலை
கடலில் சிப்பிக்குள் இருக்கும் முத்து மறைந்திருக்க
உலகில் உயர்ந்திருக்கும் இருக்கும் இறையோனும் மறைந்திருக்க
கடலில் மூழ்கி முத்தெடுத்து சேர்ப்பதுபோல்
இறைமறை கற்று அதில் மூழ்கி உயர்வை பெற வழி கண்டேன்
இறையை நாடும் மனம் இயல்பானது
வாழும் வாழ்க்கை உயர்வானது
செய்யும் செயல் சிறப்பானது