Tuesday, 12 November 2013

சூரிய ஒளியும் நிலா ஒளியும் திடீரென்று குறைவதில்லை

ஓரிடத்தில் அமர்ந்து உலகமெல்லாம் அலைகிறேன்
ஓரிடத்திலும் நிலை கொள்ள முடியவில்லை

அதைப் பார்க்க அங்கே ஓட
இதைப் பார்க்க இங்கே வர

வேண்டியது எங்கும் நிரம்பி கிடைகின்றது
வேண்டியதை இங்கு நிரப்பி வர மனம் நாடுகிறது

ஆசைப்பட்டதை அடைய முயற்சிப்பதற்குள்
அரசாட்சி செய்வோர் அடைய விடுவதில்லை

தேடியதில் கிடைத்த முத்துக்கள் சேர்பதற்குள்
தேடியது கிடைத்த முத்துக்கள் இருள் கவ்வியதால் கை நழுவி போயின

சூரிய ஒளியும் நிலா  ஒளியும் திடீரென்று குறைவதில்லை
மின்சாரம் மட்டும் திடீர் திடீரென்று நின்று போகின்றது

 மின்சாரம் திடீரென்று நின்றதால்  விரும்பியதை சேர்த்து வைக்க முடிவதில்லை
மின்சாரத்தின் உதவியோடு இயங்கும் கணினி விதவையாய் வாழ்வை இழந்து நிற்கிறது

ஓர் அறையில் அமைதியாய் கணினியில் கண்ட உலகம் மறைந்து போனது
ஓராயிரம் கோடி செலவு செய்து ராக்கட்டை விடுகின்றனர்

ஒளியை, நீரை கொடுக்க முடியாமல் பெருமை பேசுகின்றனர்
ஒளி கொடுக்க நீர் கொடுக்க தொழில் செய்கின்றனர்

செய்யும் தொழிலிலும் தேவையற்ற ஊழல்
சேவை செயயவே வந்தோர் செயலற்று நிற்கின்றனர்

முன்னேற்றம் வந்து வேதனையும் வந்தது
முற்கால மக்கள் மகிழ்வாகவே வாழ்ந்தனர்

No comments:

Post a Comment