Sunday, 17 November 2013
உன் மவுனம் சம்மதமானால்!
உன் மவுனம் சம்மதமானால்
என் கவனம் உன் பக்கம்
உன் மவுனம் உன் விழிகளில் வெறுப்பைக் காட்டினால்
என் கவனம் திசை மாறும்
சொல்லால் சொல்வதை விடுத்து
வார்த்தையால் விளையாடுவதை தவிர்த்து
விழிகளின் பார்வை விளக்கம் கொடுப்பது சிறந்து விடுகின்றது
விழிகள் அத்தனை உணர்வுகளையும் வெளிக் கொண்டு வருகின்றது
உனக்குள் பதுங்கியிருக்கும் அந்த அருமையான நிலைப்பாடு
எனக்குள் ஊடுருவி உன்னைப் பற்றி நீ சொல்லாமலேயே உன்னிலை அறிய வைத்தாய்
மொழியை விழியில் கண்டு கொண்டேன்
மொழி மறந்து உன் விழி நோக்கி என் வழியை தீர்மானித்தேன்
வம்பில்லை
மாற்றார் வர வாய்ப்பில்லை
முடிவு விழிகளால் வந்துவிட்டது
வாயடைத்து மனதில் வாழ்த்தி வந்த வழி தொடர்கின்றேன்
Subscribe to:
Post Comments (Atom)
/// மொழியை விழியில் கண்டு கொண்டேன்... ///
ReplyDeleteரசித்தேன்.. மகிழ்தேன்.. வாழ்த்துக்கள்...