எனது நண்பர் ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய கதைகளும், கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும், வழிகாட்டி குறிப்புகளும் பல பத்திரிக்கையில் வந்தது. அதனால் அவருக்கு சிறிது வருமானமும் கிடைத்தது.
அவருக்கு நீண்ட கால ஆசையாக அதனை சேமித்து ஒரு புத்தகமாக வெளியிட விரும்பினார் .
அந்த விருப்பத்தை நிறைவேற்ற தனது எழுத்துக்களால் கிடைத்த வருமானத்தை வைத்து மிகவும் செலவு செய்து குறைந்த ஆதாயம் வரும் நோக்கத்துடன் ஒரு புத்தமாக வெளியிட்டார். அவர் எதிர்பார்த்தபடி அந்த புத்தகங்களை யாரும் வாங்கவில்லை. அதனால் அச்சிட்ட அந்த அருமையான, அழகிய புத்தகங்கள் தேங்கிக் கிடந்தன. அதனால் அவர் மனம் மிகவும் வேதனை அடைந்தது. இதனை என்னிடம் சொல்லி வருத்தப் பட்டார்.
நான் அவருக்கு சொன்னேன் 'புத்தகங்கள் கரையான் பிடித்து அழிந்து போவதைக் காட்டிலும் அந்த புத்தகங்களை இனாமாக கொடுத்து விடு. மக்கள் படித்து பயன் பெறட்டும். அதனால் உனக்கு நன்மை வந்து சேரும்' என்று
அதன்படியே அனைத்து புத்தகங்களையும் இனாமாக மக்களுக்கு வினியோகித்து விட்டு மகிழ்வுடன் வந்து அதனை என்னிடம் சொன்னார் .
ஒரு வாரம் கழித்து திரும்பவும் என்னிடம் வந்தார். 'உங்கள் பேச்சை கேட்டு செய்தேன். அது பலனற்றுப் போனது' என்றார் .
'என்ன நடந்தது' என்றேன் .
'நான் வீட்டில் இருந்த பழைய பத்திரிக்கைகளை விற்பதற்காக பழைய பத்திரிக்கைகளை வாங்கும் கடைக்கு போனேன். அங்கு நான் இனாமாக கொடுத்த புத்தககங்கள் அதிகமாக இருபதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்' என்று மிகவும் வருத்தமாக சொன்னார் .
அவரை அமைதிப் படுத்துவதற்கு பலவற்றை சொல்லும்படியாகிவிட்டது.
'வருத்தப் படாதீர்கள் இந்த மக்களுக்கு நல்ல பொருளை இனாமாக கொடுத்தால் கூட அதன் மதிப்பு தெரியாமல் போய்விடுகின்றது .இனாமாக அரசு கொடுத்த தொலைக்காட்சி , கிரைண்டர், மிக்சியையும் விற்று விடுகிறார்கள்' என்று சொல்லி அவரை அமைதி படுத்தினேன். என்ன சொல்லியும் அவர் நிம்மதி அடையாமல் நகர்ந்தார்.
No comments:
Post a Comment