Tuesday 1 July 2014

நேயம் ஒன்று இருப்பதானால் சேர்ந்து வாழ்கின்றோம்


நீ விரும்பியதால் நான் விரும்ப முடியுமா!
நான் விரும்பியதால் நீ விரும்ப முடியுமா!

நான் இங்கு வந்தது நான் விரும்பியதற்காக
நீ இங்கு வந்தது உன் விருப்பத்திற்காக

சில நேரங்களில் சிலவற்றைப் பார்த்து நான் விரும்பப் படுகின்றேன்
சில நேரங்களில் சிலவற்றைப் பார்த்து நீ விருப்பப் படுகிறாய்


நான் விரும்பாமலேயே நீ என்னோடு வந்து சேர்ந்து விட்டாய்
நீ என்னோடு வந்து சேர்ந்து விட்டதனால் நான் உன்னை விரும்பி விட்டேன்

நான் விரும்பியும் என்னோடு வந்து இணைந்தாய்
நீ விரும்பியும் என்னோடு வந்து இணைந்தாய்

உனக்கும் எனக்கும் விருப்பத்தில் ஏற்றமும் இறக்கமும் உண்டு
உனக்கும் எனக்கும் கருத்தில் மாற்றமும் உடன்பாடும் உண்டு

உனக்கென்று ஒரு விருப்பம் உண்டு
நமக்கென்று நல்ல பிடிப்பு எப்பொழுதும் உண்டு

நேயம் ஒன்று இருப்பதானால் சேர்ந்து வாழ்கின்றோம்
நேயம் போக அனைவருக்கும் வாழ்வு வீணாகும்

No comments:

Post a Comment