Friday 8 May 2015

மாற்றமாய் சிந்தித்தால் ..!

நான் உன்னை விரும்ப ஒரு காரணம் சொல்கின்றேன்
நீ என்னை வெறுக்க பல காரணம் சொல்கின்றாய்

நான் ஒன்றை நினைத்து சொல்ல
நீ மற்றொன்றை நினைத்து சொல்கின்றாய்

****************
நீ விரும்பியதற்கு
நான் விரும்பியது
மாற்றமாய் அமைய
நமக்குள் மாற்றத்தை விரும்புகின்றாய்

நீ கற்றது இலக்கணம்
நான் கற்றது இலக்கியம்

நீ கற்றது தொழில்
நான் கற்றது சேவை

நீ கணக்குப் பார்க்கிறாய்
நான் மணக்கப் பார்கின்றேன்

அது எனக்கு பிடித்தத்து
அது உனக்கு பிடிக்கவில்லை

எனக்கு பிடித்ததை செப்பினேன்
உனக்கு ஏன் அதில் பிணக்கு

உனக்கு பிடித்ததை
எனக்கும் பிடிக்கச் சொல்வது
ஏற்புடையதல்ல
***************************
நண்பராக விரும்பினாய்
நண்பர் என்கிறாய்
நண்பராக பெயரளவில் இருக்கிறாய்
நண்பராக பெயரளவில் இல்லாமல்
தெரிந்தவராக இருப்பதே சிறப்பாகிவிடும்
தொல்லை தராமல் தனித்து விடு
நானே விலக்காமல்
நீயே விலகி விடு
உயர் மட்டத்தில்
உயர்வாய் இருந்து விட்டுப் போ

No comments:

Post a Comment