Saturday, 31 March 2018

இது ஒரு 'ஸ்பெசல் மாம்பழம் ' சுவையோ! சுவை! இமாம் பசந்த் மாம்பழம்


இது ஒரு 'ஸ்பெசல் மாம்பழம் ' சுவையோ! சுவை!
இமாம் பசந்த் மாம்பழம்
மாம்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்
மாம்பழத்தில் பல வகை உண்டு
மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது.
மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.
இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் அதனை அளவோடு சாப்பிட வேண்டும்
அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வந்து விடும்
மாம்பழத்தில் இனிப்பும் அதிகமாக இருப்பதால்
மாம்பழத்தை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வார்கள்
மயிலாடுதுறை பாதிரியார் ஒரு புது வகை மாம்பழத்தை உருவாக்கினார்

பெண்கள் அன்பையும் ஆதரவையும் மிகவும் விரும்புவார்கள் .

பெண்கள் அன்பையும் ஆதரவையும் மிகவும் விரும்புவார்கள் .
நாட்டில் உள்ள பல மக்களிடமிருந்து பல செய்திகளை ;தொலைக்காட்சி ஊடகங்கள் . மூலம் கிடைப்பதில் பெருமிதம் அடைகிறார்கள், அவர்களை ஊடகங்கள் ஊக்கமளிக்கின்றனர்,
ஊடகங்கள் வழியே அறிவைப்பெறுவதுடன் அதன் வழியே கற்றவர்கள் சிலர் பொருள் ஈட்டவும்
செய்கின்றனர் .அதில் மிகச் சிலர் பாதிப்புக்கும் உள்ளாகின்றனர் .
ஊக்கமளிக்கும் அளவுக்கு ஊடகங்களில் பங்கு பெறும் பெண்களிடம் இருந்து நிறைய செய்திகளைப் பெறமுடிகின்றன . அவர்களைப் போலவே இருக்க வேண்டும் என்று சிலர் தம் மகள்களுக்கு சொல்லும் அளவிற்கு சென்றுவிடுவார்கள்.

Thursday, 29 March 2018

நல்லவை நாடி அல்லவை ஒதுக்கு

அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
தவறான தனி மனிதரின் ஆய்வு தகாதது
இறைவாக்கினர் அல்லது தீர்க்கதரிசி (prophet) எனும் நபர் மீதும் .பிறப்பின் மீதும் ,குடும்பத்தின் மீதும்
தரக் குறைவான விமர்சனங்களையும் அவதூறுகளையும் பரப்பப்பட்டதை சரித்திரம் கண்டிருக்கின்றது
அதனால் இறைவாக்கினர் அல்லது தீர்க்கதரிசிகளின் வாக்கோ அல்லது அவர்களது மதிப்போ கெட்டுவிடுவதில்லை
நம்முடன் இருப்போர் ஒருவருக்கொருவர் சண்டைப் பொண்டுக்கொண்டிருக்க அடுத்தவர் பற்றியே நாம் பேசி கொண்டிருக்கின்றோம்

Tuesday, 27 March 2018

பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...!

பெண்கள் சட்டத்தினை உருவாக்குவார்கள் ஆனால்...!
  அச்சம் ,மடம், நாணம் ,பயிர்ப்பு  இவை பெண்களுக்கு மட்டும் தேவையா!
   தவறு செய்வதற்கு அச்சம் இருப்பதுதானே முறை. நாணப் படுவதற்கு நாணப்படுவதுதானே உயர்வு "அஞ்சுவது  அஞ்சாமை  பேதமை" .இது ஆணுக்கும் பெண்ணுக்கும் அவசியம் தேவை . வீரம் நிறைந்தவனாக ஆண் மட்டும் இருந்தால் போதுமா! தனக்கு வரும் ஆபத்தினை எதிர்கொள்ள ஒரு பெண்ணுக்கும் அவசியம் தேவை . குணங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சில வேறுபாடுகள் இருந்தாலும் இக்காலத்தில் பலவகையான குணங்களை ஆணும் பெண்ணும் அவசியம் பெற்றுக்கொள்ள தேவைப்  படுகின்றது. அனைத்துக்கும்  மேலாக நல்ல காரியங்களுக்காக ஆணும் பெண்ணும் அனுசரித்து போகும் நிலை அவசியம் தேவைப் படுகின்றது . ஆணின் காலில் விழும் பெண்ணின் குணமும் பெண்ணின் காலில் விழும் ஆணின் குணமும் அவசியம் அழிக்கப் படவேண்டும். சுமரியாதையை வளர்த்து இறைவன் ஒருவனுக்கே  அடிபணிவேன் என்ற மனப்பக்குவம் வந்தே ஆக வேண்டும். உனது உரிமை எனது உரிமையை பாதிக்கக் கூடாது என்பது பொதுவான சிந்தாந்தம். வாழ்வோம் வாழ விடுவோம் இதுதான் நம் கொள்கையாக மாற வேண்டும்  

இருப்பும் இறப்பும்

இறந்துவிட்டால் பார்க்க வருவார்கள்
இறந்தவருக்கு வந்திருப்பவர்கள் தெரியாது

பட்டாமணியார் இறந்தால் பத்து பேர் வருவார்கள்
பட்டாமணியார் இருக்க அவர் மனைவி இறந்தால் ஆயிரம் பேர்கள் வருவார்கள்

இறந்துவிட்டால் தவறுகளையோ பாவங்களையோ மன்னித்து விடுவீர்கள்.
இறந்தவருக்கு ஒருபோதும் அது தெரியாது.
இருக்கும்போது மன்னித்து விடுவதில்லை

ஆத்மாவின் காதல்

அழகிய வண்ணமயமான சிகை அலங்காரங்கள்
மையை ஊற்றிய கருத்த நிழல்களின்
பின்னணியைப் ஒத்த முடிகளின் கோப்புகள்
ஒளி வீசும் கண்கள்
குளர்ந்த பார்வை
குருதி நிறமுடைய மேனி
எளிமையின் பிரதிபலிப்பு,
இதயங்களை எரித்தல்
ஆன்மாக்களின் ஒளி
கவர்ச்சியூட்டும் அழகு,

மரணத்தைவிட மரண பயம் மிகவும் கொடியது

ஹாங்காங் ஏர்போர்ட் ரொம்ப அழகு.. இரு பக்கமும் மலையும், கடலும் சூழ்ந்த அழகான லேண்ட்ஸ்கேப்.. ரொம்ப சுத்தம்...
(ஹாங்காங்
21.10. 1970.
நேரம் பகல் 12.30
அன்புள்ள அண்ணன் அவர்களுக்கு தம்பி முகம்மது அலி எழுதுவது.
அஸ்ஸலாமு அலைக்கும் . இறைவன் அருளால் நலமே சைகோனிலிருந்து சனி மாலை ஐந்து மணிக்கு கேத்தே பசிபிக் விமானத்தில் பறப்பட்டு ஒன்பது மணிக்கு ஹாங்காங் வந்து சேர்ந்தேன். விமானப் பயணம் மிகவும் மகிழச்சியைத் தரக் கூ டியது என்பது உண்மையாயினும் அது பயங்கரமானது என்பதனையும் இப் பிரயாணத்தில் அனுபவத்தில் அறிந்துக் கொண்டேன்

Sunday, 25 March 2018

மல்லிகை பூக்க மணம் வீசும்


மல்லிகை பூக்க மணம் வீசும்
புன்னகை பூக்க முகம் மலரும்
மல்லிகையின் மணம் மனத்தைக் கவரும்
புன்னகையின் மனம் மாட்சிமைப் பெரும்
கனி இருக்க காய் நாடுவதேன்
முல்லை இருக்க முள்ளை நாடுவதேன்
முகம் இறுக்கத்தை காட்டி கடுமையைத் தவிர்த்திடு
புன்னைகை முகம் காட்டி மகிழ்வைக் கொடுத்திடு

வெற்றியெல்லாம் வெற்றி அல்ல

வெற்றியெல்லாம் வெற்றி அல்ல
ஆனால் அதுதான்,
அது அப்படித்தான்.

வெற்றிக்கு தேவை
விருப்பம்
முயற்சி
வெற்றி

தொடரும் கேள்விகள் !
வெற்றி முழுமையானதா ?
வெற்றி பகுதியானதா ?
வெற்றி முறைப்படி வந்ததா ?
வெற்றி தவறான முறையில் வந்ததா ?
வெற்றி தவறான காரியத்திற்கா ?
வெற்றி நன்மையான காரியத்திற்கா ?

பிரயாணத்தில் பிரியமாயிருங்கள்.

நாடுகளுக்கிடையே பயணம் செய்து , அதன் அதிசயங்களைப் பாராட்ட வேண்டும்.
உங்கள் பயணத்தின்போது அழகிய தோட்டங்கள் மற்றும் அழகான பச்சை புல்வெளிகளை நீங்கள் காணலாம். வீட்டை விட்டு வெளியேறி, சுற்றியுள்ளவற்றை சிந்தித்துப் பாருங்கள். மலைகளை , பள்ளத்தாக்குகள் தாண்டி, இனிப்பு, தூய நீரூற்று தண்ணீர் குடிக்கவும். அதனால்தான்,ஆன்மா, பறக்கிறதைப் போன்ற பறவையைப் போலவும், வானத்தில் நீந்திக்கொண்டிருக்கும்
உங்கள் வீட்டிலிருந்து வெளியேறி, உங்கள் கண்களில் இருந்து கறுப்புக் கயிறுகளை அகற்றிவிட்டு, அல்லாஹ்வின் விசாலமான நிலங்களைக் கடந்து, இறைவனை நினைவு கூர்ந்து அவனை மகிமைப்படுத்துங்கள்.

Friday, 23 March 2018

இதயத்தை கொள்ளை கொண்டாய்

நீ தான் என் இதயத்தை கொள்ளை கொண்டாய்
நீ தான் நம் மக்களை பாசத்தில் கொள்ளை கொண்டாய்
நீ தான் என் தவறை காணாமல் கடந்து போகின்றாய்
நான் தான் உன்னை அறிந்தும் கடிந்து பேசுகின்றேன்
நான் எங்கேயோ போக இருக்க
நீ உனக்காக என்னை ஓரடத்தில் நிறுத்தி விட்டாய்

வீட்டோடு மாப்பிள்ளை

வீட்டோடு மாப்பிள்ளை ஆவதில் கவுரவம் ஒன்றும் குறைவதில்லை. அதனால் அனுகூலமே அதிகம் உண்டு . ஏனெனில் மனைவி தன் கணவனுடன் சேர்ந்து  தனது தாய்  வீட்டிலேயே தங்கி வாழும் போது  தனது சகோதரிகள் மற்ற தனது தாய் வழி உறவினர்கள் ஆகியோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கிறது என்பது மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்கு எந்த ஒரு தயக்கமுமின்றி தன் உறவினர்களிடம் உதவி நாட முடிகிறது.  

கடல் ஓரப்  பகுதிகளில் வசிக்கும்   முஸ்லிம்களிடம் (அதாவது  –  மரைக்காயர்களிடம்) கணவன் தனது மனைவி வீட்டாருடன் சென்று விடுவதால், மாமனார் உறவுகளின் உதவி அதிகம் கிடைக்கும். திருமணத்தின் போதே பெண்ணுக்கு வேண்டிய அளவு (வீடு முதற்கொண்டு) வசதி செய்து தந்து விடுவார்கள் .

ஆலோசனை என்பது ஒரு இயற்கை செயல்முறை.

Mohamed Ali
ஆலோசனை என்பது ஒரு இயற்கை செயல்முறை.
அறிவுரை கேட்டு  நண்பர் வந்தார்  அறிவுரை சொல்வதும் .கேட்பதும் விரும்பாத ஒன்று  விரும்புவதில்லையென்றாலும், அவர் அதனை நான் உண்மையில்  கேட்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ஒரு ஆலோசகராக இருக்க கற்றுக்கொள்வதன் மூலம் நம்பகூடிய ஒரு நபராக  தயார்படுத்தியிருந்தால், மக்கள் தங்கள் மனதில்  உள்ள பாரத்தை , இறங்கவும் செய்வதற்கு வர விரும்புவார்கள்.

ஆலோசனை  கேட்பவர்கள். பிரச்சினைகள் சொல்லிக்கொண்டிருப்பதால் அவர்களது தாக்கத்தை மற்றும் அவரது தகுதியை குறைத்து மதிப்பிடாமல். கவனித்துப் பேசுதல் மற்றும் சரியான பதிலளிப்பது முறையானதாகும் ,
குழப்பமான மனதோடு வந்த நபரை அவரது  சங்கடத்தை அடையாளம் கண்டு, அவரது விருப்பங்களை ஆராய்ந்து, புத்துணர்ச்சியை தரும்படி , பயனுள்ள ஆலோசனைகள் கொடுத்து  உதவுவது உயர்வு .

உரையாடலின் மிகச் சிறிய விவரங்களை நினைவில் வைத்து பேசுதல்  பொறுப்பாகும்.

தோல்வி

தோல்வியானதால்  இன்னும் வெற்றி வாய்ப்பை இழக்கவில்லை

தோல்வியானதால்  இன்னும் வெற்றிகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருப்பது

சாதிக்கவில்லை என்பது  ஏதாவது கற்று கொண்டிருப்பது

தோற்றதால்  முட்டாள் அல்ல , அதுவே  நிறைய நம்பிக்கை தருகின்றது .

தோற்றதால்   ஏமாற்றப்படவில்லை , இன்னும் முயற்சி செய்ய உந்தப்படுகின்ற நிலையாகின்றது .

Tuesday, 20 March 2018

உலகமெல்லாம் பறந்து பறந்து சுற்றி வந்தேன்

உலகமெல்லாம் பறந்து பறந்து சுற்றி வந்தேன்
ஜப்பானில் ஓரிடம் போக ஒருவரிடம் வழி கேட்டேன் .அவர் நான் அங்குதான் போகின்றேன் வாருங்கள் என்றார் .
நீங்கள் எந்த நாடு
இந்தியா
இந்தியாவில் எங்கே
தமிழ்நாடு
இதுவரை ஆங்கிலத்தில் பேசியது
நானும் தமிழ்நாடு தான் என்பதோடு உரையாடல் தமிழில் தொடர்ந்தது

Monday, 19 March 2018

படி படி என்ற ஓசைகள் ...

படி படி என்ற ஓசைகள் ரீங்காரமாக காதை துளைக்கின்றது
படிப்பதெல்லாம் பெருமைக்காகவும் தேர்வில் மனனம் செய்ததை வாந்தி செய்வதற்க்காக உள்ளது
நான் படிக்கும் காலத்தில் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதோடு சரி
படித்தாயா என்று சொல்வதில்லை
விடிகாலையில் எழுப்பி விடுவார்கள் பள்ளிக்கு தொழச் செல்ல
அது மழைக்காலமாக அல்லது குளிர் காலமாக இருந்தாலும்
அம்மாவுக்கு உள்ள பாசத்தால் குளிர் காலத்திலும் மழைக்காலத்திலும்
விடிகாலையில் எழுப்பாமல் இருந்தாலும் அத்தா விடாது
வளர்ந்த பின் பள்ளிக்கூட படிப்பை முடிக்கும் முன்பே அம்மாவும் அத்தாவும் இறந்துவிட்டதால்

Saturday, 17 March 2018

தோல்வியால் துவளவில்லை

இன்னும் தோற்றுவிடவில்லை வெற்றியை நாடி வழி வகுக்கின்றேன்
இன்னும் சாதிக்கவில்லை சாதிக்க கற்றுக் கொண்டிருக்கின்றேன்
தோல்வி முட்டாளாக்கவில்லை, அது நிறைய நம்பிக்கையை உருவாக்குகின்றது .
தோல்வி அடைந்தால் ஏமாற்றப்பட்டிருப்பதாக அர்த்தமல்ல, முயற்சி செய்ய தயாராக இருப்பதாக திட்டம்
தோல்வியால் வேறு வழியில்லை யெனபதில்லை , வேறு வழியில் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஊக்கம் தருகின்றது .
தோல்வியால் தாழ்ந்துவிடவில்லை , உயர்வதற்கு உந்துதல் சக்தியை தருகின்றது

Thursday, 15 March 2018

உப்பில் கட்டிய பாவை மழைவர கரையும்

உப்பில் கட்டிய பாவை மழைவர கரையும்
இதயம் கட்டிய உறவு உயிருடன் உறையும்

அன்பால் கட்டிய பாசம் நிலைத்து நிற்கும்
பாவையின் பார்வை பாசத்தில் திரும்ப நிலைத்து நிற்பேன்

நான் பேசியதை நானே அறியேன்
நீ பேசியதை நான் அறிவேன்

நான் பேசியதில் நீ குற்றம் கண்டாய்
நீ பேசியதில் நான் சுற்றம் கண்டேன்

Thursday, 8 March 2018

கதிர் வீசிடும் காலை உன் ஆணை அல்லாஹ்

கதிர் வீசிடும் காலை...

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே அல்லாஹ்

நல்வாழ்வினில் பேரருள்
நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
நீயே அல்லாஹ்

திருவேதம் நபிநாதர்
தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் தீனுக்கும்
நீயே அல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹூ அல்லாஹூ
அல்லாஹூ அல்லாஹ்


(அல்லாஹ் (அரபி) = இறைவன் (தமிழ்))

பாடல் கவிதை கவிஞர் அன்புடன் புகாரி
பாடல் பாடியவர் தீனிசைத் தென்றல்,
தேரிழந்தூர் தாஜுதீன்
தயாரிப்பு Mohamed Ali இல்லத்தில்
(முழு பாடல்கள் ஆல்பமாக மற்ற அன்புடன் புகாரி கவிதைகளுடன் விரைவில் இறைவன் நாடினால் வரும் தங்கள் வாழ்த்துகள் மற்றும் துவாவுடன்
அன்புடன் முகம்மது அலி ,அன்புடன் புகாரி
----------------------------------

Sunday, 4 March 2018

புரிந்து கொண்டவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்

வேண்டாதவளோடு வாழும் வாழ்க்கை வேதனைதான்
வேண்டாத நாட்டோடு கூட்டமைத்தல் பாதகம்தான்
நமக்கு உதவி செய்வதற்காக பெரிய சாத்தானிடம் சென்றால்
நமக்கு நாமே நரகத்திற்கு வழி அமைத்து சென்றதாகிவிடும்
சிரிப்பு எப்போதும் கண்ணீரைப் பின்தொடர்கிறது
புரிந்து கொண்டவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்
--------------
உத்தம நட்பால் உயர்வு பெற்றதால்
தண்ணீர் பாய்கிறது வாழ்க்கை பூக்களில்
மகிழ்வால் கண்ணீர் வழிந்திடுகின்றது
இறைவனது அருட்பெரும் கருணையால்

Saturday, 3 March 2018

ஷாம் நாடு (ஸிரியா)"Syria (al-Sham)

ஷாம் நாடு (ஸிரியா)"Syria (al-Sham)


ஷாம் நாடு, நபிமார்கள் மற்றும் வேதங்கள் அருளப்பட்ட பகுதியாக இருந்தது
நபிகள் நாயகம் இருமுறை ஷாம் (ஸிரியா)நாட்டுக்கு வியாபார நிமித்தமாக சென்றுள்ளனர்
'ரோமர்கள் ஷாம் நாட்டு அரபியர்களுக்கு கஸ்ஸானியர்களை அரசர்களாக நியமித்தனர். இவர்களது தலைநகரமாக புஸ்ரா விளங்கியது. ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு யர்மூக் போர் நடைபெறும் வரை கஸ்ஸானியர்கள் ரோமர்களின் கவர்னர்களாகவே ஷாம் நாட்டில் ஆட்சி செய்தனர். அந்தக் கவர்னர்களில் இறுதியானவரான ‘ஜபலா இப்னு அய்ஹம்’ என்பவர் அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்களின் காலத்தில் முஸ்லிம்களுக்கு அடிபணிந்தார்.'
தற்கொலை செய்வது குற்றம் .
வேதனையோடு உயிரோடு போராடிக்கொண்டிருக்கும் மனிதனை இறக்க உணர்வுடன் எந்த மனிதனின் உயிரையும் எடுக்க(mercy killing'- the killing of a patient suffering from an incurable and painful disease.) யாருக்கும் உரிமை இல்லையென்று வளர்ந்த சமுதாயமென்று பெயரளவிற்கு சொல்லிக்கொள்ளும் நாடுகள் சொல்கின்றன
போரில் ஈடுபடும்போது இயற்க்கை வளங்களை ,பெண்களை ,அப்பாவி மக்களையும் ,குழந்தைகளையும் பாதிக்கக் கூடாது .இஸ்லாம் இதனை சொல்கின்றது .அனைத்து நாடுகளும் அதனையே சொல்கின்றன
இதை மீறுவோர் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார் என்று அறிவால் மற்றும் வளத்தால் வளர்ந்த நாடுகளே வழிகாட்டியாக சொல்கின்றன
ஆனால் இப்பொழுது நடப்பது மாற்றமாக உள்ளது