Saturday 3 March 2018

ஷாம் நாடு (ஸிரியா)"Syria (al-Sham)

ஷாம் நாடு (ஸிரியா)"Syria (al-Sham)


ஷாம் நாடு, நபிமார்கள் மற்றும் வேதங்கள் அருளப்பட்ட பகுதியாக இருந்தது
நபிகள் நாயகம் இருமுறை ஷாம் (ஸிரியா)நாட்டுக்கு வியாபார நிமித்தமாக சென்றுள்ளனர்
'ரோமர்கள் ஷாம் நாட்டு அரபியர்களுக்கு கஸ்ஸானியர்களை அரசர்களாக நியமித்தனர். இவர்களது தலைநகரமாக புஸ்ரா விளங்கியது. ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு யர்மூக் போர் நடைபெறும் வரை கஸ்ஸானியர்கள் ரோமர்களின் கவர்னர்களாகவே ஷாம் நாட்டில் ஆட்சி செய்தனர். அந்தக் கவர்னர்களில் இறுதியானவரான ‘ஜபலா இப்னு அய்ஹம்’ என்பவர் அமீருல் முஃமினீன் உமர் (ரழி) அவர்களின் காலத்தில் முஸ்லிம்களுக்கு அடிபணிந்தார்.'
தற்கொலை செய்வது குற்றம் .
வேதனையோடு உயிரோடு போராடிக்கொண்டிருக்கும் மனிதனை இறக்க உணர்வுடன் எந்த மனிதனின் உயிரையும் எடுக்க(mercy killing'- the killing of a patient suffering from an incurable and painful disease.) யாருக்கும் உரிமை இல்லையென்று வளர்ந்த சமுதாயமென்று பெயரளவிற்கு சொல்லிக்கொள்ளும் நாடுகள் சொல்கின்றன
போரில் ஈடுபடும்போது இயற்க்கை வளங்களை ,பெண்களை ,அப்பாவி மக்களையும் ,குழந்தைகளையும் பாதிக்கக் கூடாது .இஸ்லாம் இதனை சொல்கின்றது .அனைத்து நாடுகளும் அதனையே சொல்கின்றன
இதை மீறுவோர் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார் என்று அறிவால் மற்றும் வளத்தால் வளர்ந்த நாடுகளே வழிகாட்டியாக சொல்கின்றன
ஆனால் இப்பொழுது நடப்பது மாற்றமாக உள்ளது

இப்பொழுது சிரியாவில் நடப்பது மனிதநேயத்திற்கு மாறுபட்டதாக உள்ளது
சிரிய உள்நாட்டு யுத்தத்தில் மில்லியன் கணக்கான குழந்தைகளின் உயிர்களை பாதித்துள்ளது மற்றும் இதுவரை 50,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
சிரியாவில் மிகுதியாக சுன்னி முஸ்லிம்கள் .
சிரிய ஜனாதிபதி பஷர் அசாத் மனைவி இங்கிலாந்து வழி வந்தவர் ,
சுன்னி முஸ்லீம்கள் 75% மக்கள்தொகை கொண்டது, அவர்களில் சுமார் 80% பேர் சிரிய அரேபியர்கள், குர்துகள், துருக்கியர்கள், மற்றும் பாலஸ்தீனியர்கள் உள்ளனர்.
ஆட்சி செய்பவர்கள் சியாக்கள் .அவர்களுக்கு ஆதரவாக ரஷ்ய நாடு மற்றும் ஈரான் நாடு
.சிரியாவின் உள்நாட்டுக் குழப்பதில் பாதிக்கப்படுவோர் அப்பாவி மக்கள்
பல வெளி சக்திகள் ?
அமெரிக்காவும் .சவூதியும் உலகநாட்டு சபையும் காட்சியாளர்களாக இருந்து வருகின்றனர் .இஸ்ரேல் மகிழ்வாக ரசிக்கின்றது
சிரிய அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவது ஃபிரான்ஸ், கனடா,லண்டன் போன்ற ஐரோப்பிய மேற்கத்திய நாடுகள்தான்.!
பஷர் அல் அசாத் 2000 ஆம் ஆண்டு முதல் சிரியாவை ஆட்சி செய்தார், அவருடைய தந்தை 30 ஆண்டுகளுக்கு பின்னர் மரணமடைந்தார். மார்ச் 2011 ல் தொடங்கப்பட்ட ஒரு ஆட்சி-எதிர்ப்பு கிளர்ச்சி உள்நாட்டுப் போரில் உருவானது.
சிரிய மோதல்கள் நம் காலத்தின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளன.
போரில் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிரியாவிற்குள் தப்பிப்பிழைக்க குடும்பங்கள் போராடி வருகின்றன,
அமெரிக்கா ,ரஸ்யா .துருக்கி ,ஈரான் ,இஸ்ரேல் .குர்திஷ் . IS .
சிரியா தன்மக்களுடன் இவைகள் சிரியாவை போர்களமாக்கி விட்டதால்
வெளிநாட்டு சக்திகளிடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதால், சிரியாவின் தீங்கு விளைவிக்கும் சமாளிக்க முடியாத யுத்தம் சமாதானத்திற்கு இன்னும் சுமையாகி விடும் நிலை , அதன் குடிமக்கள் இந்தத் தாக்குதலின் சுமைகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்
உதவி செய்யவருவோரும் பாதிப்பை தருகின்றனர்
குற்றமற்ற குழந்தைகள் யுத்தத்தின் கொடூரங்களால் கொல்லப்படுகின்றனர்
குழந்தைகள் உணவு மற்றும் மருத்துவ பொருட்கள் இல்லாததால் தங்கள் உயிர்களை இழந்து விளிம்பில் உள்ளனனர் .
சரித்திரப்புகழ் பெற்ற பழைமையான யூப்ரடீஸ் நதியின் கதி யுத்தததை பார்த்து குருதி நீரால் கலந்து விடும் கதி
உலகின் மறுபக்கத்தில் நடந்து கொண்டிருப்பதால் அதை வெறுமனே புறக்கணிக்க முடியாது.
வேறு வழியில்லாமல் போரால் பாதிக்கப்பட்டு தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யத் தகுதியுள்ள மக்களும் நாடுகளும் இல்லாவிட்டால், ஆயிரக்கணக்கானோர் இறந்து போவார்கள்.
நமது ஒவ்வொரு பங்களிப்பும் சிரியாவில் ஒரு உயிரை காப்பாற்ற உதவும் ,
நாம் மக்களுக்கு செய்யும் உதவிகள் அநியாயம் செய்யும் நாடுகளுக்கு எதிராக எழுப்பும் குரல்கள் உலகத்தை இந்த கிரகத்தை குணப்படுத்தும் மற்றும் அன்பையும் அனுதாபத்தையும் பிரதிபலிக்கும் .
சிரியாவில் உயிர்களை காப்பாற்றுவதற்கு அவர்களுக்கு உதவும். வாழ்வில் ஒன்றாக வாழ்வோம்.

No comments:

Post a Comment