உலகமெல்லாம் பறந்து பறந்து சுற்றி வந்தேன்
ஜப்பானில் ஓரிடம் போக ஒருவரிடம் வழி கேட்டேன் .அவர் நான் அங்குதான் போகின்றேன் வாருங்கள் என்றார் .
நீங்கள் எந்த நாடு
இந்தியா
இந்தியாவில் எங்கே
தமிழ்நாடு
இதுவரை ஆங்கிலத்தில் பேசியது
நானும் தமிழ்நாடு தான் என்பதோடு உரையாடல் தமிழில் தொடர்ந்தது
தமிழ்நாட்டில் எங்கு ?
தஞ்சை ஜில்லா
அட நானும் தஞ்சை கும்பகோணம்தான் என்றார்
நான் மயிலாடுதுறை பக்கம் நீடூர் என்றேன்
நீடூர் சையது தெரியுமா நான் கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் பழக்கமில்லை என்றார்
நான் அவர் தம்பிதான் என்றேன்
மிக்க மகிழ்சியாக உள்ளது நம் ஊர் மக்களை சந்திக்க என்று தொடர்ந்தார்
அவர் மலேசியாவிலேயே குடும்பத்துடன் இருக்கின்றாராம்
ஆயிரம் ஆனாலும் சொந்த நாடு அவரது பிறந்த ஊரில் இருப்பது சொந்த வீட்டில் இருப்பது உயர்வுதான்
வெளி ஊரில் குடிபோனானாலும் வந்த ஊர் பட்டம் வைத்து அழைக்க ஆரம்பித்து விடுவார்கள்
"குத்தாலத்தார் வீடு" "திருமங்கலத்தார் வீடு" இப்படியாக
ஊர்' வந்தாலே மன நிறைவு வந்து விடும்
எங்கள் ஊர்
எங்கள் ஊரில்
குறைந்த வசதிகளுக்கே குறைதான் !
ஆனாலும் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக மனிதநேயமும் நிறைய உண்டு
வீதிகள் தோறும் தூசிக் காற்றுகள் வீசினாலும் நடைபயணம் சென்று நல்ல காற்று வாங்கவும் இடமுண்டு
பேரன் பேத்தியோடு நான் Mohamedali
No comments:
Post a Comment