Showing posts with label அவதூறு. Show all posts
Showing posts with label அவதூறு. Show all posts

Monday, 24 February 2014

மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்


வாய்க்கு வந்த வார்த்தைகளை
வரும் வழியில் வந்தவரிடம் சொல்லி வைத்தேன்

சொல்லிய வார்தைகள்
உண்மைக்கு புறம்பானது

தெளித்த வார்தைகள்
காற்றில் பறக்கும் இறகுகள் போல் பறந்து போயின

கேட்டவர்கள் கொளுத்திப் போட்டனர்
கொழுந்தெறியும் தீ பரவி பாதகமானது

அவதூறாக தெளித்த வார்தைகள்
அவமானத்தை பரப்பிச் சென்று பாவத்தை குவித்தன

Friday, 19 April 2013

திருமண காட்சிக்குப் பின் ஒரு விசித்திரமான கதை ஒளிந்துள்ளது.

 
மணமகள் இருக்குமிடமெல்லாம் ஆயிரக்கணக்கான விளக்குகள், அவளை சுற்றி புதிய செயற்கை மலர்கள் மற்றும் இயற்கை மலர்கள்.ஒரு நகைக்கடையே அந்த மணப்பெண்ணின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான செலவு செய்து அலங்கரிக்கப்பட்ட மேடை, அதில் பலர் மணமகளை சூழ நின்று மணமகளோடு படம் பிடிப்பவருக்கு கவனம் கொடுத்து தன்னை முன்னிறுத்திக்கொள்ள செய்வார்கள். இதற்கு மணப் பெண்ணோடு சேர்ந்து நிற்க 'தள்ளுபடி' இத்தனையும் இருக்கும்.

 இது ஒரு திருமண காட்சி பகுதியாக இருந்து வருகின்றது. இதன் பின் ஒரு விசித்திரமான  கதை ஒளிந்துள்ளது. திருமணம்  என்பது  பெண்ணின் கனவு - அந்த ஒரு சரியான நாள் வர காத்திருந்து அதற்குள் ஆயிரம் கற்பனைகள் அது நினைத்தபடி நடந்ததா! அல்லது அந்தப்பெண் மாப்பிள்ளை திருமணம் சந்தையில் விலை போனாளா! அதற்காக அவள் வீட்டார் கொடுத்த விலை எவ்வளவு! பட்ட கடன்கள் எவ்வளவு!
மாப்பிளை வீட்டாரின் வலையில் விழ வேறு காரணங்கள் உள்ளதா! இவைபோன்ற உள்ளார்த்தமான நிகழ்வுகள் மறைக்கப் பட்டு திருமண கோலாகல நிகழ்வுகள் பலவகையான உணவுகளுடன் நடந்துக் கொண்டிருக்கும்

 இதில் சிலர் விருந்தையே குறிவைத்து அமர்ந்திருப்பார்கள். ஒரு சிலர் தம்மை திருமணதிற்கு அழைக்கவில்லையே என்ற கோபத்தில் அவர்கள் வீட்டில் அல்லது கடைத்தெருவில் மாப்பிளை மற்றும் பெண்ணைப் பற்றி வாய்க்கு வந்தபடி கதை அளந்து அவதூறு பேசவும் தயங்க மாட்டார்கள் இந்த அவதூறு திருமண மண்டபத்திலேயும்   பேசுவார்கள் .