Showing posts with label உண்மை. Show all posts
Showing posts with label உண்மை. Show all posts

Monday, 7 July 2014

அறிய நம்பிக்கை வேண்டும் உண்மையை இறைவனே அறிவான்

உங்களைப் பற்றி உண்மையானது
உங்களைப் பற்றி உண்மையானதை எழுதுங்கள்
உங்களைப் பற்றி உண்மையானதை எழுத உயர்வீர்கள்

உங்களைப் பற்றி உண்மையானதை அடுத்தவர் எழுதுவது முடியாது
உங்களைப் பற்றி அடுத்தவர் எழுதுவது
உயர்வானது மட்டும் இருக்கும் அல்லது பொய்யானது கலந்து இருக்கும்
உங்களை உயவாக்க அது உதவாது
-------------------------------
இறைவனை நம்பு
இறைவனை நம்பினால்தான்
நம்பிக்கை மீது
நம்பிக்கை உள்ளவனாகிறாய்
இறைவன் அறிவான்
இறைவன் மீது நீ கொண்டிருக்கும் நம்பிக்கையை

மனிதனிடமும் நம்பிக்கையுடையவனாக நடந்துக் கொள்
மனிதர்களில் சிலர் நம் செயலின் மீது நம்பிக்கை பெறவில்லையெனில்
மனிதர்களில் சிலர் பெறாத நம்பிக்கையைப் பற்றி வருத்தப் பட்டு சோர்ந்து விடாதே
மனிதனாய் நம்மை படைத்த இறைவன் மீது நாம் நம்பிக்கை பெற முயல்வதே நம் வாழ்வின் உயர்வு

Sunday, 20 April 2014

நல்லதைச் சொல் .நயம்படச் சொல்..

நல்லதைச் சொல் .நயம்படச் சொல்..

சொல்ல வேண்டிய நேரத்தில் சொல் .

சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டால் அறிவு வளராது

சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் விட்டால் பயனற்று போகும்..!!
by-Mohamed Ali

Monday, 24 March 2014

விவாதங்கள் விளங்க வைக்கின்றன

விவாதங்கள் விளங்க வைக்கின்றன
அறிக்கைகள் அறிய வைக்கின்றன

விவாதங்களுக்கு அறிக்கைகள் தேவைப்படலாம்
விவாதங்கள் ஆக்கப் பூர்வமாக இருப்பதுடன் உள்ளத்தை கவரக் கூடியதாக அமைய வேண்டும்

விவாதங்கள் ஒரு கருத்தைப் பற்றியதாக இருக்கும்
விவாதங்கள் ஒரு தனி மனிதனை சாடுவதாக அமையக் கூடாது

Monday, 24 February 2014

மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்


வாய்க்கு வந்த வார்த்தைகளை
வரும் வழியில் வந்தவரிடம் சொல்லி வைத்தேன்

சொல்லிய வார்தைகள்
உண்மைக்கு புறம்பானது

தெளித்த வார்தைகள்
காற்றில் பறக்கும் இறகுகள் போல் பறந்து போயின

கேட்டவர்கள் கொளுத்திப் போட்டனர்
கொழுந்தெறியும் தீ பரவி பாதகமானது

அவதூறாக தெளித்த வார்தைகள்
அவமானத்தை பரப்பிச் சென்று பாவத்தை குவித்தன

Sunday, 8 December 2013

சொல்லிவிட்டேன் !

என்
மனதுக்குள்
அழுத்தி வைத்ததை
என்னை அறியாமல்
சொல்லிவிட்டேன்.
சொல்லிவிட்டதை
எண்ணி
என் மனம் பதைக்கிறது

நெஞ்சில் உள்ளதை
நெடுநாள் நிறுத்தி வைக்க முடியவில்லை

உன்னிடம் நான் சொல்லிவிட்டேன்
உன்னிடமே உன்னைப் பற்றியதை
ஒளிக்காமல் உன்னிடமே சொல்லிவிட்டேன்
ஒளிவு மறைவின்றி உண்மையை சொல்லிவிட்டேன்

Saturday, 19 October 2013

எங்கிருந்தோ வந்தாய் !

எங்கிருந்தோ வந்தாய்
என்னுள் புகுந்து விட்டாய்
என்னை அடக்கவும் செய்தாய்
என்னை ஆளவும் செய்தாய்

எனக்கென்று ஒரு கொள்கை
எனக்கென்று ஒரு ஆசை
எனக்கென்று இருந்ததை இழந்து
எனக்கென்று இருந்தது உன் பிடியில்

உண்மை உறைக்க பொய் என்கிறாய்
பொய் உறைக்க உண்மை என நம்புகிறாய்
மை போட்டு என்னை மயக்கினாயோ!
உண்மை உன்னில் அடக்கமோ

உன் கண் அசைப்பில் அடங்கிய என்னை
உன் கண்காணிப்பில் இருக்கச் செய்கிறாய்
உன் போக்கில் நான் இருக்கச் செய்ய
என் போக்கு என்னை விட்டு அகன்றது

Monday, 23 September 2013

உண்மை அறிய நாடுங்கள். மக்களை பிரிவு படுத்தாதீர்கள்



அனைத்தையும் அறிவேன்! அடுத்தவனை அறியேன்!

கல்யாணராமன் வேலைத் தேடி ஒரு அலுவலகத்திற்கு போகிறார். அங்கு பேட்டி காண்பவர்கள் கேள்விக்கு மேல் கேள்வி கேட்கின்றனர். அங்கே கேட்ட கேள்வியும் கல்யாணராமன் சொன்ன பதிலும் மற்றும் அவருக்கு வேலைத் தருவதற்கு இறுதியாக கொடுத்த விவரமும் அறிய தொடர்ந்து படியுங்கள்!

உன் பெயர் ?
கல்யாணராமன்
உன் தந்தையின் பெயர்?
கல்யாணம்.
உன் தாயின் பெயர்?
சீதா தேவி.
உன் பெயரில் உன் தந்தை பெயர் சேர்ந்துள்ளதே!
அது நாங்கள் தொடர்ந்து செய்வது.
ஏன் உங்கள் தாயின் பெயரை சேர்ப்பதில்லையா!
பழக்கமில்லை .பெண்ணாயிருந்தால் கணவன் பெயரில் சேர்த்துக் கொள்வார்கள்.
ஓகோ! பெண்ணாயிருந்தால் பெயரில் கூட தனித்து நிற்க முடியாதோ!
அப்படியில்லை. இது தொடர்ந்து வரும் பழக்கம்.
நீ என்ன படித்திருக்கிறாய்? முன் வேலைப் பார்த்த அனுபவம் உண்டா ?
நான் கணினி பொறியாளர் படிப்பு படித்துள்ளேன். மதிப்பெண்களும் அதிகம் வாங்கி உள்ளேன் அனால் வேலைப் பார்த்த அனுபவமில்லை,

மற்ற அனுபவங்கள் மற்றும் பொது அறிவைப் பற்றி பேட்டி தொடர்கிறது..

Friday, 14 June 2013

கவிஞன்


கவிஞன் காணாததை கவிதையில் சொல்வான்
கவிஞன் கண்டதையும் கவிதையில் சொல்வான்
கவிஞன் காணாததையும் கண்டதையும்  நயமாக சொல்வான்
கவிஞன் கற்பனை  வெள்ளத்தில் நீந்துவான் 

கவிஞனின் பெயரில் ஒளிவு மறைவு இருக்கும்
கவிஞனின் கவிதை கருத்திலும்  உண்மை மறைந்திருக்கும்
கவிஞனின் கவிதை பொய்யால் புனைக்கப்  பட்டதல்ல
கவிஞனின் கவிதை மெய்யால் மிகைப் படுத்தப்  பட்டிருக்கும்

கவிஞன் வார்த்தையால் விளையாடுவான்
கவிஞன் வாய்மையால்  கலைஞனாவான்
கவிஞன் வாழ்த்துவதில் கவிதையாய் தந்து மகிழ்வான்
கவிஞன் வாழ்தப்படுவதில் கவிஞனின் கவிதைகள் மணம் வீசும்