Monday 13 January 2014

வேண்டவே வேண்டாம் விரக்தி !

வேண்டவே வேண்டாம் விரக்தி
சூழ்நிலைகள் சுழல வைக்க வேண்டாம்
வாழும் நிலை தடுமாற்றம் தர வேண்டாம்
பாதகமான வாய்ப்புக்கள் பயம் தர வேண்டாம்
தோல்வியைக் காண துயள வேண்டாம்
துயரத்தால் உணர்வுகள் செயலிழக்க வேண்டாம்

சென்ற வாடிக்கையாளர் மீண்டும் வருவார்
செய்யும் முயற்சியை திறம்பட செய்து விடு
குறைத்துக் கேட்டால் கொடுத்து விடு
வாடிக்கையாளர் குறையாமல் செயல் படு
நெறிமுறையை நேர்மை யாக்கு
உண்மையை உரிமையாக்கு
தயாரிப்புகள் தகுதியாகட்டும்
அழைப்புகள் உயர்வாகட்டும்
அணுகுமுறை மகிழ்வை தரட்டும்
அணுகுமுறைகள் நிறை வேறட்டும்
ஆழ்ந்த நிபுணத்துவம் கையாளப் படட்டும்

கேட்பது கிடைக்க முயன்று விடு
கேட்பது கிடைக்காமல் போனால்
கிடைக்கும் பக்கம் போக நாடிடுவார்
ஒன்றில் கிடைக்காத ஆதாயம்
மற்றொன்றில் கிடைத்து விடும்
ஒரு வாடிக்கையாளர் போனால்
மற்றொரு வாடிக்கையாளரும் அவரைத் தொடர்வார்

அனைவரும் நமக்காகவே
அனைவருக்காகவே நாமும்
நமக்கு கிடைப்பது அனைவருக்கும் கிடைப்பதற்கே
செயல்படு
தொடர்ந்து செயல் படுத்து

FOR THE BURNING DESIRE TO WIN & TO BE SUCCESSFUL,
NEVER RETREAT.

No comments:

Post a Comment