Followers

Friday, 24 January 2014

வெற்றியாளனாய் இருக்க தவறான நண்பர்கள் தேடி வருவார்கள்!

விவாதித்தோம், விவரித்தோம்
விளையாடின வார்த்தைகள்
வார்த்தைகள் வாதமாகின
இருவருக்குள் நடந்தவைகளை
பலருக்கு பகிர்ந்தாய்
பகிர்ந்ததில் பாதியை பகிர்ந்தாய்
மீதியை உனக்குள் முடக்கினாய்
பாதியை பகிர்ந்தது பாதித்தது என்னை
மீதியை பகிராமல் முடங்கிப் போனாய்

வெற்றியாளனாய் இருக்க
தவறான நண்பர்கள்
தேடி வருவார்கள்
தொல்வியாளனாய் இருக்க
கூடி நின்றவர்கள்
வெற்றியாளனை
தேடிப் போய் விடுவர்
தனித்தவனாய்
புகலிடம் தேடுவாய்


வண்ணத்து பூச்சி
வண்ணமாய் நிறத்துடன்
கண்ணுக்கு அழகு காட்சியாய்
மக்களை கவர்கிறது
வண்ணத்து பூச்சி
வருவதற்கு முன்
புழுவாய் இருக்க
மக்களால் கவரப் படாமல்
மக்களால் நசுக்கப் படுகிறது

1 comment:

  1. முத்தான வரிகள்...

    அப்பட்டமான உண்மைகள்...

    பாராட்டுக்கள்...

    ReplyDelete