Followers

Wednesday, 5 March 2014

சிலரது வேள்வி ! விருப்பம் ! இப்படியும் தோன்றும் !

சிலரது வேள்வி !

பொருள் சேர்க்க பலமுறை பயணம் செய்யலாம்
பாவத்தை கழிக்க ஒருமுறை யாத்திரை போதும்

பொருள் சேரும் செலவழியும்
பாவத்தை கழிக்க பலமுறை யாத்திரை செய்ய
பாவம் சேர்ந்தால் யாத்திரை செய்து பாவத்தை கழிக்கலாம்
பாவம் செய்வதின் மீது பயம் அற்றுப் போகும்

தெரியாமல் செய்த பாவம்
அறியாமல் செய்த பாவம்
அறிந்து செய்யும் பாவச் செயல்கள்
ஒருமுறையோடு அழிந்து விட வேண்டும்
அது தொடர் செயலாக் இருப்பின்
பாவச் செயல் அவனை தொடரச் செய்யும்
பாவத்தை கழிக்க பலமுறை யாத்திரை செய்வதும்
அவனுக்கு அந்த யாத்திரை மகிழ்வை நாடும் யாத்திரையாக அமைந்து விடும்

சிலரது விருப்பம்
மனைவியாய் ஒருவர்
துணைவியாய் ஒருவர்

மனைவியாய் இருப்பவர் பணிவிடை செய்ய
துணைவியாய் இருப்பவர் துள்ளும் இளமையை தூண்டி விட

மனைவியாய் இருப்பவர் தொடர்ந்து இருக்க
துணைவியாய் இருப்பவர் வேண்டாதபோது விலகி விட

சிலரது இப்படியும் தோன்றும்
காக்கா பிடிப்பதினிலே தேர்தல் நேரத்தினிலே - உமக்கு
ஜாதி நிறம் தோன்றுவதில்லையே கட்சிக்காரா

பார்க்கும் இடங்கில் எல்லாம் - உந்தன்
உண்மை நிறம் தோன்றுதையே கட்சிக்காரா

கேட்கும் ஒளியில் எல்லாம் - நின்றன்
கட்சி இசை பாடுதடா கட்சிக்காரா

தீக்குள் விரலை வைத்தால் கட்சிக்காரா - உன்னை
தீண்டும் அச்சம் தோன்றுதடா கட்சிக்காரா

No comments:

Post a Comment