Followers

Thursday, 28 August 2014

பெண் பார்க்க வந்தாயோ! பொருள் அடைய வந்தாயோ!

எம்மை பார்க்க வந்தாய்
எம்மீது போர்த்தப் பட்ட பொருளைப் பார்க்கிறாய்
எம்மை சுற்றியுள்ள பொருளைப் பார்க்கிறாய்
உம்மோடு வந்தவர்களும்
உமது குணத்தோடு ஒன்றி உள்ளனர்
உங்கள் செயல் வெட்கப் படுவதாய் இருக்க
உம்மைப் பாராமலேயே
நான் வெட்கத்துடன் நின்றேன்

வாழ்க்கைத் துணைவி தேட மனம் பெற்ற உமக்கு 
வாழ வரும் துணைவி வசதியோடு வரவேண்டுமென்ற மனம் மிகைத்து நிற்கின்றது 

பெண்ணின் மனதை விட பொருளின் மீது பற்றுள்ளவனாய் இருக்கின்றாய் 
பெண் பார்க்க வரும் மனமற்று 
பொருளின் மீதே உமக்கு பற்று அதிகம் 
கடையில் விற்கும்  பொருளாக 
இனமாக கிடைத்த  பொருளாக
இருக்க என் மனம் இடம் தராது 
எமை நேசிக்கும் மனமுடையவனையே
நான் நேசிக்கின்றேன் 
வந்த வேகத்தில் திரும்பி விடு 
இனாமுக்கு ஆசைபடும் இயந்திர மனம் கொண்டவனே

No comments:

Post a Comment