Monday, 25 August 2014

.பத்திரிகை தர்மம் என்று ஒன்று இருக்க ...

செய்தி துறையை ,பத்திரிகை துறையை ஆள்பவர்கள் முதலாளிகளும் (கார்பரேட் நிறுவனங்கள் ) ஆட்சி செய்பவர்க்களுமாக உள்ளார்கள் .
நல்ல மனம் கொண்டவர்கள் பத்திரிகை நடத்தினால் மக்கள் அப் பத்திரிகையை வாங்குவதில்லை .
அதற்க்கு விளம்பரங்களும் கிடைக்காமல் நஷ்டமாகி பத்திரிகை நிறுத்தப் படுகின்றது .
கலைக்கதிர்,மஞ்சரி போன்ற பத்திரிகைகள் செய்த சேவைகள் அதிகம் .ஆனால் அப் பத்திரிகைகள் இப்பொழுது இல்லை .
 சில பத்திரிகைகள், தொலைகாட்சிகள் நடத்தும் முதலாளிகள் யார் !(கார்பரேட் நிறுவனங்கள் )
அவர்கள் கொடுக்கும் செய்திகள் எப்படி இருக்குமென்று நீங்கள் யோசனை செய்யுங்கள் .
அனைவரும் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள்.
தேர்தல் காலங்களில் திட்டமிட்டு தங்களுக்கு வேண்டிய கட்சியை ஆட்சியில் அமர்த்த அனைத்து முறைகளிலும் செய்திகளை அதற்க்கு சாதமாக தந்தார்கள்
உண்மைகள் மறைக்கப் பட்டன
மக்கள் நலம் ஒதுக்கப் பட்டன
மனிதநேயம் மறைக்கப் பட்டன
.பத்திரிகை தர்மம் என்று ஒன்று இருக்க அவர்கள் அரசியல் ,மத,ஜாதி ,இன சார்புடையதாக மறைமுகமாக செயல்படுகின்றார்கள் ,
சமுதாய நோக்கமும் மனித நேயமும் இருக்க வேண்டும் .
.இன்னும் நல்லவர்களுக்கு துணை நிற்க மக்கள் இருக்கிறார்கள் .உங்களிடம் நல்ல அனுபவம் உள்ளது .இன்றே செயல் படுங்கள் .காப்புரிமை அற்ற நல்ல செய்திகள் தந்து மக்களிடம் பகிர்வதற்கு வழி செய்யுங்கள்
நடுநிலையோடு வரும் பத்திரிகைகள்,தொலைக்காட்சிகளுக்கு ஆதரவு கொடுங்கள்
அவசியம் தேவை
முடிந்தால் நீங்களே ஆரம்பியுங்கள்

No comments:

Post a Comment