Monday 25 August 2014

உன்னைப் பார்த்தாலே அடிமை

உன்னைப் பற்றி உயர்வாய் சிலர் சொன்னார்கள்
உன்னைப் பார்த்தாலே அடிமையாய் விடுவாய் என்று சிலர் சொன்னார்கள்

பலர் பலவிதமாகச் சொல்ல உன்னைப் பார்க்கும் ஆவல் அதிகமானது
உன்னிடம் வந்தவுடன் பலர் பலவிதமாகச் சொல்வதிலும் உண்மை இருப்பதாக அறிகின்றேன்

உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்
உன்னைப் பார்த்த பின் பிரிய மனமில்லை

உன்னிடம்
அறிவைப் பெறுகின்றேன்
மகிழ்வையும் பெறுகின்றேன்
உன்னைப் பார்த்ததால் குழப்பமும் அடைகின்றேன்
வசீகரமாய் இருக்கின்றாய்
என்னைப் பார்க்க வைத்து வசதியும் அடைகிறாய்
என்னைப் போல் உன்னைப் பார்க்க வருபவர்கள்
பல திக்கிலிருந்தும் வருகின்றனர்
உன்னை பார்த்ததினால்
உன்னைப் பார்க்க வந்தவர்களின் பல நட்புகளைப் பெற்றேன்
உன்னைப் பார்த்ததிலிருந்து
உன்னைப் பார்ப்பதை நிறுத்தவில்லை
நாட்கள் கூடுகின்றன
வயதும் கூடுகின்றன
வயது கூடியதால்
வனப்பும் குறைகின்றன
நீ மட்டும்
வருடங்கள் கூடினாலும்
உன் வசீகரங்களை அதிக மாக்கிக் கொள்கின்றாய்
உன்னை கவரச் செய்யும் திறனை வளர்த்துக் கொள்கின்றாய்
நான் உன்னைப் பார்த்து பார்த்து தளர்ந்து விடுகின்றேன்

#முகநூல்

No comments:

Post a Comment