Monday 10 November 2014

நான் எங்கிருந்தாலும் நானேதான்!

நான் 
ஊர்லே நவாப்ஷா
வெளியூர்லே பக்கிர்ஷா

ரோமுக்கு போனால் ரோமானியனாவேன்
ரோமானியர் என்னை அழைப்பதோ இந்தியன்
மேலப்பாளையம் போனால் மேலப்பாளையனாவேன்
மேலப்பாளையத்தில் உள்ளவர் என்னை அழைப்பதோ நீடூரான்

எங்கு இருந்தாலும் நான்
எப்படி இருந்தாலும் நான்

என்ன என்னிடம் இருந்தாலும் நான்
என்னை எத்தனை பெயர் சொல்லி அழைத்தாலும் நான்தான்
எனக்கு நானே எத்தனை பெயர் சூட்டிக் கொண்டாலும் நான்தான்
எனக்கு உயிர் உள்ளவரை அத்தனை பேரும் சுற்றி வரும்
என்னிடம் உள்ள உயிர் என்னை விட்டு அகன்றால்
என்னை விட்டு அத்தனை பேரும் அகன்றுவிடும்
அத்தனை பெயரும் எனக்கு புதுப் பெயர் சூட்டுவர்
எனக்கு சூட்டும் பெயர் மொவுத் (பிணம் )
எனக்கு அந்த பெயரும் சில மணி நேரங்கள் தான்
 
-முகம்மது அலி ஜின்னா 
*********************************************************************
 நான்????? வெகு இயல்பான தேடல் வரிகள்: வாழ்த்துகள்.
இராஜ. தியாகராஜன்
****************
நானிங்கே என்னுளத்தில் நானென்று நம்புதலோ,
நானென்றுன் உள்ளத்தில் நானென்று நம்புதலோ,
நானிங்கு நானிலத்தில் நானாமோ? நீயுணர்ந்த
நானதுவை என்னுள்ளே நானறிதல் நானாவேன்!
..........நாடோறும் என்னுள்ளே நானறிதல் நானாவேன்!

கண்கட்டு வித்தையெனக் கண்டவர்கள் பூமியிலே
சுண்ணாம்பாய் வெண்சங்கு சூளையிலே சுட்டதுபோல்
மண்சட்டிச் செந்தீயின் மாறிநிறம் பட்டதுபோல்
எண்ணு முணர்வுகளா லேற்றநிலை கொள்வாரே!
..........இப்புவனந் தான்போற்றும் ஏற்றநிலை கொள்வாரே!
 
 

No comments:

Post a Comment