Monday 24 November 2014

செழுமையான பூங்காவாகி நாடுவோர்க்கு மகிழ்வைத் தரவேண்டும்


என் தாயை வாங்கி வளர்த்தார் உன் தாய்
என் தாய் உன் வீட்டில் என்னைப் பெற்றாள்
என் தாய் என்னை பாலூட்டி வளர்த்தது போல்
உன் தாய் உன்னை பாசமாய் வளர்க்கின்றாள்
உனக்கென்ன வருத்தம்

ஏன் உன் தலையை தரையில் தாழ்தினாய்
என் தாய் என்னை உதைத்தாலும்
என் தாயின் உதை எனக்கு உறுத்தாது
என் தாயினிடமே திரும்ப ஓடி நிற்ப்பேன்
என்னை பாசமாய் வளர்க்கும் உனக்கும்
என் குணம்தானே வரவேண்டும்

எழுந்திரு
எனக்காக எழுந்திரு
என்னோடு விளையாட
உன்னை விட்டால்
எனக்கு யார் உள்ளார்
நிமிர்ந்தெழு
உன்னை அறிந்த நெஞ்சே
உன்னை நிமிர்த்தி வைக்கும்

நாம்
மரங்கள் போல் வளர்ந்து
செழித்த கிளைகளை விளரவிட்டு
விதைகளை விழச் செய்து
செழுமையான பூங்காவாகி
நாடுவோர்க்கு மகிழ்வைத் தரவேண்டும்
முகம்மதது அலி
Mohamed Ali

No comments:

Post a Comment