Monday 17 November 2014

பாசங்கள் பகிர்ந்துக் கொள்ளப் படும்போது நேசங்கள் உறுதியாக்கப் படுகின்றன

அன்பு ,பாசம் ,நேசம், காதல் அனைத்தும் இதயத்தின் வெளிப்பாடு
இதயத்தின் உணர்வுகள் இயல்பாய் உந்தப்படுவது
மழையால் கொட்டப்படும் நீரை தடை போட்டு நிறுத்த முடியாது
இதயத்தில் வெளிப்படும் நேசத்தையும் தடை போட்டு நிறுத்த முடியாது

நேசம் ஒரு தெளிந்த நீரோடை
நேசத்தை நெஞ்சத்தில் நிறுத்தி வைக்காமல்
நேசத்தை பகிர்ந்துக் கொள்ள வேண்டும்
காதலித்தால்
காதலை வெளிப்படுத்த வேண்டும்.
காதல் உளவியலான தாக்கத்தை ஏற்படுத்தும்
உளவியலால் உந்தப்பட்ட உணர்வு நெருக்கத்தை உருவாக்கும்
காதல் வெறுமனே இதயத்தின் ஒரு உணர்வோடு மட்டும் இருந்துவிடுவது
காதலால் உருவான உணர்வால் எப்பயனுமில்லை
காதல் நடைமுறை வாழ்வில் வலிமையான பங்கை பெற்றிருக்க வேண்டும்

ஒரு வழிக் காதல் கானல்நீருக்கு ஒப்பானது
இருவழிக் காதல் தெளிந்த நீரோடை

மனைவிமீது வைத்திருக்கும் காதலை
தன நெஞ்சத்தில் நிறுத்திக் கொள்வதால்
இதயத்திலிருந்து வெளிப்படும் குருதியை தடைப் போடும் நிலை
மனைவிமீது வைத்திருக்கும் காதலை மனைவியிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்
பாசங்கள் பகிர்ந்துக் கொள்ளப் படும்போது
நேசங்கள் உறுதியாக்கப் படுகின்றன

No comments:

Post a Comment