Thursday, 26 December 2019

என்ன செய்தாய் இறைவனுக்காக என்பார்கள் !

இறைவன் என்னுடன் எப்போதும்
இருட்டில் இருக்கும்போதும் ,
வாகனத்தில் பிரயாணம் செய்யும் போது,
பூங்காவில் உட்கார்ந்து இயற்கையை ரசிக்கும்போதும்
ஏன் ! எனது உறக்கத்திலும்

எல்லா இடங்களிலும் எங்கிருந்தாலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனை நேசியுங்கள்
உங்களை அர்ப்பணிக்கவும். .
உலகம் உங்களுக்கு தேவை.
நீங்கள் மனிதகுலத்திற்காக வளர்க்கப்பட்ட சிறந்த சமூகம்.


இறைவன் ,அல்லாஹ் என்கின்றாயே
என்ன செய்தாய் இறைவனுக்காக என்பார்கள் !
இறைவனுக்கு நான் செய்ய வேண்டுவது அவனை நேசித்து
நன்றியுடன் தொழுவதுதான்
நான் மற்றவர்களுக்கு செய்த சேவையை அவன் அறிவான்
அச்சேவையை யாரிடமும் பரப்பிக் கொண்டு திரிவது என் நோக்கமல்ல
அடுத்தவருக்கு தொந்தரவு தராமல் இருப்பதே ஒரு சேவைதான்
இதற்கு ஒரு கருவியாய் அமைவது என் மனம்தான்
அம்மனத்தை தூண்டுவதும் வழி காட்டுவதும் அவன் தந்த மறைதான்

No comments:

Post a Comment